UPDATED : மார் 01, 2025 07:53 AM
ADDED : பிப் 28, 2025 09:42 PM

சென்னை: நடிகை விஜயலட்சுமியை திருமணம் செய்வதாக கூறி
மோசடி செய்தது மற்றும் பாலியல் வன்கொடுமை செய்தது தொடர்பான வழக்கில்,
சீமானிடம் விசாரணை நடத்தி, போலீசார் வாக்குமூலம் பெற்றனர்.
கர்நாடக
மாநிலம், பெங்களூருவைச் சேர்ந்த நடிகை விஜயலட்சமி, நாம் தமிழர் கட்சியின்
தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது, சென்னை வளசரவாக்கம் காவல்
நிலையத்தில், திருமண மோசடி மற்றும் பாலியல் வன்கொடுமை, நகை, பணம் பறிப்பு
தொடர்பாக, 2011ல் புகார் அளித்தார்.
ரத்து செய்ய மறுப்பு
இது
தொடர்பாக சீமான் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இவ்வழக்கில்,
'சம்மன்' அனுப்பி, 2023ல், வளசரவாக்கம் காவல் நிலையத்தில் சீமானிடம்
விசாரித்து வாக்குமூலம் பெற்றனர். பின், விஜயலட்சுமி புகாரை வாபஸ் பெற்று
விட்டார்.
அதையடுத்து, தன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து
செய்ய வேண்டும் என, சீமான், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்
செய்தார். இதை விசாரித்த நீதிமன்றம், 'பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்கு
என்பதால், இதை சாதாரண வழக்காக எடுத்துக் கொள்ள முடியாது' என கூறி, வழக்கை
ரத்து செய்ய மறுத்து விட்டது.
மேலும், இவ்வழக்கு தொடர்பாக விசாரணை
முடித்து, 12 வாரங்களுக்குள் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என,
போலீசுக்கும் உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து, போலீசார், சீமானுக்கு
இரண்டு முறை சம்மன் வழங்கினர். கட்சி நிகழ்ச்சிக்காக தர்மபுரி சென்று
இருந்த சீமான், நேற்று மாலை, 6:00 மணியளவில் சென்னை திரும்பினார்.
விசாரணைக்கு ஆஜராக தயாராக இருந்தார். ஆனால் போலீசார், இரவு 8:00 மணிக்கு வருமாறு கூறி விட்டனர்.
இதனால், வடபழனியில் உள்ள நட்சத்திர ஹோட்டலுக்குச் சென்ற சீமான், தன் வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
அதன்
பின், அங்கிருந்து வளசரவாக்கம் காவல் நிலையம் நோக்கி புறப்பட்டார்.
அதற்குள், வளசரவாக்கம் காவல் நிலையத்தை சுற்றி, நாம் தமிழர் கட்சியினர்
ஆயிரக்கணக்கானோர் திரண்டு விட்டனர். இவர்களை சமாளிக்க முடியாமல் போலீசார்
திணறினர்.
வளசரவாக்கம் காவல் நிலையம் மற்றும் அதை சுற்றியுள்ள
பகுதிகளில், பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு இருந்தன. ஸ்ரீதேவி
குப்பம் சாலை மூடப்பட்டது. மூன்று இடங்களில் இரும்பு தடுப்புகள் அமைத்து,
விசாரணைக்கு பின்னரே, அந்த வழியாக பொது மக்கள் அனுமதிக்கப்பட்டனர்.
தள்ளுமுள்ளு
சீமான்
கைது செய்ய இருப்பதாக தகவல் பரவியதால், அவரது கட்சியினர் மத்தியில்
பதற்றம் காணப்பட்டது. பின், இரவு 9:00 மணிக்கு மேல் சீமான் விசாரணைக்கு
அழைக்கப்பட்டார்.
சீமான் வந்த வாகனம், வளசரவாக்கம் காவல் நிலையத்தை
நெருங்கியதும், கட்சியினர் சூழ்ந்து கொண்டனர். அப்போது, போலீசாருக்கும்
கட்சியினருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
அதன்பின், இரவு 10:00
மணிக்கு காவல் நிலையத்தில் ஆஜரான சீமானிடம், கோயம்பேடு துணை கமிஷனர்
அதிவீரபாண்டியன் மேற்பார்வையில் விசாரணை அதிகாரிகள், 52 கேள்விகளுக்கு
பதில் பெறும் வகையில் வாக்குமூலம் பதிவு செய்தனர்.
அதை வீடியோ பதிவும் செய்தனர். நள்ளிரவு வரை விசாரணை நீடித்தது
போலீஸ் ஸ்டேஷன் செல்லும் சாலை முழுவதும் சி,சி,டிவி,இக்கள், ட்ரோன் கேமிராக்கள் மூலம் அங்குள்ள சூழலை போலீசார் கண்காணித்தனர்.சீமானிடம் நடைபெறற் விசாரணையை முழுவதும் வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் ஏற்பாடுகள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீமான் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு
விசாரணை முடிவடைந்த நிலையில் சீமான் பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசினார். விசாரணையின் போது இதுவரை கேட்கப்பட்டிருந்த பழைய கேள்விகளே கேட்கப்பட்டதாக தெரிவித்தார்.
ஈவேரா கொள்கைகளுக்கு எதிராக பேசுவதால் என்னை கைது செய்ய தி.க.,விடம் இருந்து தமிழக அரசுக்கு அழுத்தம் சென்றுள்ளது. .
கஷ்டத்தில் இருந்த போது நடிகையால் எனக்கு எப்படி ரூ 60 லட்சம் தர முடியும். நடிகையுடன் ஏற்பட்ட உறவு திருமணம் என்ற நிலைக்கு வரவில்லை. நடிகையுடன் 6 அல்லது 7 மாதங்கள் தான் பழக்கம் இருந்தது. நடிகை என்னை காதலித்திருந்தால் முச்சந்திக்கு வந்திருக்க மாட்டார். பாலியல் குற்றம் என்ன இருக்கிறது. விரும்பி உறவு வைத்து கொண்ட நடிகை பின்னர் பிரிந்து சென்று விட்டார்.
மாண்புமிகு ஸ்டாலின் அப்பாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு சீமான் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் பேசினார்.