உள்ளடக்கத்திற்கு செல்ல

இடைத்தேர்தல் 2 தொகுதிகளில் 9 நாள் பிரசாரம்: சீமான் திட்டம்
இடைத்தேர்தல் 2 தொகுதிகளில் 9 நாள் பிரசாரம்: சீமான் திட்டம்
UPDATED : செப் 20, 2026 04:11 AM
ADDED : செப் 20, 2026 04:09 AM

அ நிறம் | அளவு
சென்னை: இடைத்தேர்தல் நடக்க உள்ள மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில், நாளை முதல் அக்., 4ம் தேதி வரை, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரசாரம் செய்ய உள்ளார்.
நா.த.க., வெளியிட்ட அறிவிப்பு:
இடைத்தேர்தலில் நாளை முதல் அக்., 4ம் தேதி வரை, சீமான் பிரசாரம் செய்கிறார். அதன்படி, நாளை முதல் 23ம் தேதி வரை தாராபுரத்தில் பிரசாரம் செய்கிறார்.
மதுராந்தகத்தில், வரும் 26, 27, 30 ஆகிய மூன்று நாட்கள் பிரசாரம் செய்வார். அதைத் தொடர்ந்து, மீண்டும் தாராபுரத்தில் அக்., 3, 4 ஆகிய தேதிகளில் பிரசாரம் செய்கிறார்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
