வரும் 30ல் மாநாடு நடத்தி மரங்களோடு பேசுகிறார் சீமான்
வரும் 30ல் மாநாடு நடத்தி மரங்களோடு பேசுகிறார் சீமான்
UPDATED : ஆக 28, 2025 05:52 AM
ADDED : ஆக 28, 2025 05:51 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: நாம் தமிழர் கட்சி சார்பில், வரும் 30ம் தேதி 'மரங்களோடு பேசுவோம்' மாநாடு நடக்க உள்ளது.
நா.த.க., சார்பில் நடத்தப்பட்ட, ஆடு, மாடுகள் மாநாடு, மக்களிடையே பேசு பொருளானது. இதைத் தொடர்ந்து, திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே, அருங்குளம் கூட்டுச்சாலை, மனிதநேய பூங்கா வெற்றி தோட்டத்தில், வரும் 30ம் தேதி, மரங்கள் மாநாடு நடக்க உள்ளது.
இம்மாநாட்டில் நா.த.க., தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்று, 'மரங்களோடு பேசுவோம்; மரங்களுக்காக பேசுவோம்' என்ற தலைப்பில் பேச உள்ளார்.
மாநாடு நடக்கும் இடத்துக்கு சில நாட்களுக்கு முன் சென்ற சீமான், அங்கிருக்கும் மரங்களை பார்த்து பேசியதோடு, அவற்றுக்கு முத்தம் கொடுத்து மகிழ்ந்தார்.