தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/திருக்கோவில் பணியிடங்களை நிரப்ப தேர்வு வாரியம்: அமைச்சர் ரமேஷ்

திருக்கோவில் பணியிடங்களை நிரப்ப தேர்வு வாரியம்: அமைச்சர் ரமேஷ்

திருக்கோவில் பணியிடங்களை நிரப்ப தேர்வு வாரியம்: அமைச்சர் ரமேஷ்

5


ADDED : ஆக 21, 2026 05:35 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 21, 2026 05:35 PM

5


5
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: கோவில் மற்றும் அதன் கீழ் இயங்கும் கல்வி நிறுவனங்களில் நேரடி நியமனம் வாயிலாக வெளிப்படையாக பணி நியமனம் செய்ய திருக்கோவில் தேர்வு பணியாளர் தேர்வு வாரியம் இந்தாண்டு அமைக்கப்படும் என சட்டசபையில் அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் அறிவித்து உள்ளார்.

சட்டசபையில் அவர் வெளியிட்ட அறிவிப்புகள் பின்வருமாறு:

*இந்தாண்டு ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட 64 கோவில்களில் 125 கோடி ரூபாயில் புனரமைப்பு பணி

*சிதிலமடைந்த 150 கோவில்களில் 85 கோடி ரூபாய் செலவில் திருப்பணி

*22 கோவில்களில் தேவையான திருப்பணிகள் செய்ய 50 கோடி ரூபாய் ஒதுக்கீடு

*சமயபுரம், மருதமலை உள்ளிட்ட 13 கோவில்களில் மண்டபங்கள், சுற்று மண்டபம், வசந்த மண்டபம் மகா மண்டபம் இளைபாறும் மண்டபம் போன்றவை ரூ.21.37 கோடியில் கட்டித்தரப்படும்.

*குச்சனூர் சனீஸவரர் கோவில் உட்பட 8 கோவில்களுக்கு 22 .25 கோடி ரூபாயில் மதிப்பில் ராஜகோபுரம் கட்டப்படும்

*சென்னை கொளத்தூர் சோமநாதர் கோவில் வேளச்சேரி தண்டீஸ்வரர் கோவில், நுங்கம்பாக்கம் பிரசன்ன வெங்கடேச பிரசன்ன பெருமாள் கோவிலில் 2 கோடி ரூபாய் மதிப்பில் 3 புதிய மரத்தேர் செய்ய அறிவிப்பு வெளியீடு

*திருச்சி ரங்கநாதர் கோவில், திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி கோவில், மதுரை தெப்பக்குளம் மாரியம்மன் கோவில் உட்பட 105 கோவில்களில் திருக்குள பணிகளுக்காக 45 கோடி ரூபாய் ஒதுக்கீடு

*சமயபுரம் உள்ளிட்ட 3 கோவில்களில் 11 கோடி ரூபாய் மதிப்பில் பக்தர்களுக்கான தங்கும் விடுதி

*திருவண்ணாமலை, பழநி, சிறுவாபுரி, இருக்கன்குடி உள்ளிட்ட 22 கோவில்களில் 50 கோடி மதிப்பில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும்.

*பக்தர்கள் அதிகளவு வரும் 20 திருக்கோவில்களில் பக்தர்களின் நலன் கருதி 3 கோடி ரூபாய் செலவில் ஆம்புலன்ஸ் வாங்க நடவடிக்கை

*மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்கள் பயன்பெறும் வகையில் நீண்ட சுற்று உடைய 38 கோவில்களி்ல சக்கர நாற்காலிகள் வாங்கப்படும்

*திருச்செந்தூர் கோவிலுக்கு வரும் பக்தர்களை ரயில்வே ஸ்டேசன் மற்றும் பஸ் ஸ்டாண்டுகளில் இருந்து கோவிலுக்கு கட்டணம் இல்லாமல் அழைத்து வர 1 கோடி ரூபாயில் 4 மினிபஸ்கள் வழங்கப்படும்.

*நெல்லை சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மலைக்கு கட்டணம் இல்லாமல் சென்று வர 1 கோடி ரூபாய் செலவில் 2 பஸ்கள் இந்தாண்டு வழங்கப்படும்

*16 கோவில்களில் 10.25 கோடி மதிப்பில் அன்னதான கூடங்கள் ஏற்படுத்தப்படும்.

* கோவில் பணியாளர்களின் நலனை கருத்தில் கொண்டு அவர்கள் ஓய்வு பெறும் போது அவர்கள் ஒப்படைக்கும் ஈட்டிய விடுப்பை 240 நாட்களாக உயர்த்தி கோவில் பணியாளர்களுக்கு பணப்பலன்கள் வழங்கப்படும்.

*கோவில் பணியாளர்களுக்கான மகப்பேறு விடுப்பு 9 மாதங்களில் இருந்து 12 மாதங்களாக உயர்த்தப்படும்.

*கோவில் பணியாளர்கள் மற்றும் அவர்களின் வாரிசுகளின் திருமணத்திற்கு ஆண்களுக்கு 6 ஆயிரம் ரூபாயும், பெண்களுக்கு10 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும் திருமணக்கடன் இனி முதுநிலை கோவில்களில் முதுநிலை கோவில் பணியாளர்களுக்கு ரூ.2 லட்சமாகவும், முதுநிலை அல்லாத கோவில் பணியாளர்களுக்கு ரூ.1 லட்சம் ஆகவும் உயர்த்தி வழங்கப்படும்.

*கோவில் சார்பில் நடத்தப்படும் கல்லூரி மாணவர்களின் சேர்க்கையில், கோவில் பணியாளர்களின் குழந்தைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதோடு, 50 சதவீதம் கட்டணச் சலுகை வழங்கப்படும்.

*கோவில் மற்றும் அதன் கீழ் இயங்கும் கல்வி நிறுவனங்களில் நேரடி நியமனம் வாயிலாக வெளிப்படையாக பணி நியமனம் செய்ய திருக்கோவில் தேர்வு பணியாளர் தேர்வு வாரியம் இந்தாண்டு அமைக்கப்படும்

*கோவில்களால் நடத்தப்படும் 4 பள்ளிகளில் சுகாதார வளாகம், குடிநீர் வசதி, விளையாட்டு அரங்கம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்த 5.52 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

*அறுபடை வீடு கோவில்களை முன்மாதிரி கோவில்களாக மாற்ற திட்ட அறிக்கை

*கிராம தெய்வங்களின் வழிபாட்டு மரபை போற்றும் வகையில் கிராம தெய்க கிராம திருவிழா நடத்தப்படும்.

*அனைத்து மண்டலங்களிலும் கூத்து நாடகம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுடன் கிராமிய திருவிழா

*கோவில் வளாகத்திலேயே பிரசாதம் தயாரித்து வழங்கும் திட்டம் 15 கோவில்களில் மேம்படுத்தப்படும்.

*மூத்த குடிமக்கள் ஆயிரம் பேருக்கு அந்தந்த பகுதி முக்கிய கோவில்களுக்கு ஆன்மிக பயணத்துக்கு ஏற்பாடு செய்யப்படும்

*கோயில் நிலங்களில் அடர்வனம் மற்றும் நந்தவனம் அமைக்கப்படும்

*சித்தர்களின் பெருமையை போற்றும் வகையில் விழா நடத்தப்படும்.

*காமராஜர் பிறந்த நாளில் கோயில்களில் பொது விருந்து ஏற்பாடு செய்யப்படும்

*மருதமலை, அழகர்கோவில்களுக்கு சொந்தமான பள்ளிகளில் மேம்பாட்டு பணிகள் செய்யப்படும்.

*மருதமலை கோவில் பள்ளியில் 90 லட்சம் ரூபாயில் கலையரங்கம் சுகாதார வளாகம் அமைக்க நடவடிக்கை

*அழகர் சுந்தர்ராசா மேல்நிலை பள்ளியில் 87 லட்சம் ரூபாயில் குடிநீர் உள்ளிட்டவசதிகள் ஏற்பாடு செய்யப்படும்.

*திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில் கலை அறிவியல் கல்லூரிக்கு நிரந்தர கட்டடம் கட்டப்படும்.

*பழநி கோயில் கல்வி நிறுவனங்களுக்கு 3.10கோடி ரூபாயில் 9 புதிய பஸ்கள் வாங்கப்படும்

*மீண்டும் யானைகள் புத்துணர்வு நல்வாழ்வு முகாம் நடத்தப்படும்.

* கோவை, மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில் அருகே பவானி ஆற்றின் கரையோரம், ரூ.3 கோடி மதிப்பில் யானைகள் நலவாழ்வு முகாம் மீண்டும் நடத்தப்படும்

*மீனாட்சி அம்மன் கோயில் கருணை இல்லத்தில் கூடுதல் அறை நவீன சமையல் கூடம் அமைக்கப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை அமைச்சர் ரமேஷ் வெளியிட்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us