விஜய்க்கு எதிராக பேசுவதை தவிர்த்த செல்வப்பெருந்தகை
விஜய்க்கு எதிராக பேசுவதை தவிர்த்த செல்வப்பெருந்தகை
ADDED : அக் 16, 2025 01:56 AM
சென்னை:சட்டசபையில் கரூர் துயரச் சம்பவம் குறித்த விவாதத்தில் பேசிய, காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, த.வெ.க., பற்றியும், அதன் தலைவர் விஜய் பற்றியும் பேசுவதை தவிர்த்தார்.
சட்டசபையில் கரூர் துயரம் குறித்து, முதல்வர் ஸ்டாலின் நேற்று விளக்கம் அளித்தார். அதைத் தொடர்ந்து நடந்த விவாதத்தில், எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி மற்றும் கட்சிகளின் தலைவர்கள் பேசினர்.
தி.மு.க., கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.,க்கள் 'கரூர் துயரத்திற்கு த.வெ.க.,வும், விஜயும்தான் காரணம்' என கடுமையாக விமர்சித்து பேசினர்.
ஆனால், தி.மு.க., கூட்டணியில் உள்ள முக்கிய கட்சியான காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, கரூர் துயரத்திற்கு தி.மு.க., அரசையும், காவல் துறையையும் குற்றஞ்சாட்டிய அ.தி.மு.க.,வை கடுமையாக விமர்சித்தார். பிணத்தின் மீது அரசியல் நடத்துவதாக, எதிர்க்கட்சிகள் மீது குற்றஞ்சாட்டினார். முதல்வர் ஸ்டாலினையும், காவல் துறையையும் வெகுவாக பாராட்டினார்.
ஆனால், த.வெ.க., மற்றும் விஜய்க்கு எதிராக, ஒரு வார்த்தை கூட பேசவில்லை.