தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/செம்மண் குவாரி வழக்கு 25ம் தேதி ஒத்திவைப்பு

செம்மண் குவாரி வழக்கு 25ம் தேதி ஒத்திவைப்பு

செம்மண் குவாரி வழக்கு 25ம் தேதி ஒத்திவைப்பு


ADDED : மார் 19, 2024 04:57 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 19, 2024 04:57 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விழுப்புரம்: பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கு விசாரணை வரும் 25ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

விழுப்புரம் மாவட்டம், வானுார் அடுத்த பூத்துறை கிராமத்தில், செம்மண் குவாரியை ஒப்பந்தம் எடுத்து, விதிமீறி அதிகளவில் செம்மண் எடுத்து அரசுக்கு ரூ.28.36 கோடி இழப்பு ஏற்படுத்திய புகாரின் பேரில், முன்னாள் அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கவுதமசிகாமணி எம்.பி., உட்பட 8 பேர் மீது, கடந்த 2012ம் ஆண்டு மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்தனர்.

இவ்வழக்கு விசாரணை, மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடக்கிறது. வழக்கில் மொத்தமுள்ள 67 சாட்சிகளில் இதுவரை 17 பேர் சாட்சி அளித்துள்ளனர். அதில், 14 பேர் பிறழ் சாட்சியம் அளித்துள்ளனர். நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, மாவட்ட முதன்மை நீதிபதி (பொறுப்பு) ஹெர்மிஸ், வழக்கில் விசாரணையை வரும் 25ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us