sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 28, 2025 ,மார்கழி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

 செங்கோட்டை ---- தாம்பரம் உட்பட பல ரயில்கள் நேரம் மாற்றம்

/

 செங்கோட்டை ---- தாம்பரம் உட்பட பல ரயில்கள் நேரம் மாற்றம்

 செங்கோட்டை ---- தாம்பரம் உட்பட பல ரயில்கள் நேரம் மாற்றம்

 செங்கோட்டை ---- தாம்பரம் உட்பட பல ரயில்கள் நேரம் மாற்றம்


ADDED : டிச 26, 2025 02:36 AM

Google News

ADDED : டிச 26, 2025 02:36 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர்: திருநெல்வேலி வழியாக வாரம் மூன்று நாட்கள் இயங்கும் செங்கோட்டை- -- தாம்பரம் ரயில் (எண் 20684) உட்பட பல ர யில்களின் நேரம் மாற்றப்பட்டுள்ளது.

திங்கள், புதன், வெள்ளிதோறும் செங்கோட்டையில் இருந்து புறப்படும் ரயில் 2026 ஜன., 2 முதல் மாலை 4:30 மணிக்கு பதில் மாலை 5:35 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7:25 மணிக்கு தாம்பரம் செல்லும். இந்த ரயில் மாலை 5:46க்கு தென்காசி, 6:13க்கு அம்பாசமுத்திரம், இரவு 8:18க்கு விருதுநகர், 8:43க்கு அருப்புக்கோட்டை, 10:48க்கு காரைக்குடி, 11:15க்கு அறந்தாங்கி, அதிகாலை 12:06க்கு பட்டுக்கோட்டை, 3:13க்கு சிதம்பரம், 3:49க்கு திருப்பாதிரிப்புலியூர், 5:15க்கு விழுப்புரம் வழியாக செல்லும்.மறுமார்க்கத்தில் செவ்வாய், வியாழன், ஞாயிறு தோறும் வழக்கம் போல் இரவு 9:00 மணிக்கு தாம்பரத்தில் புறப்பட்டு மறுநாள் காலை 10:50 மணிக்கு செங்கோட்டை செல்லும்.

பொதிகை ரயில்: 2026 ஜன., 1 முதல் செங்கோட்டையில் இருந்து தினமும் காலை 6:45க்கு பதிலாக 6:50க்கு பொதிகை ரயில் (எண் : 12662) புறப்படும். மறுநாள் காலை 6:10க்கு பதிலாக அதிகாலை 5:55க்கு சென்னை எழும்பூர் செல்லும். மறுமார்க்கத்தில் மாற்றம் இல்லை.

கொல்லம் ரயில்: தினமும் இயக்கப்படும் கொல்லம் ரயில் (16102) 2026 ஜன., 1 முதல் இரவு 8:03க்கு சங்கரன்கோவில், 8:28க்கு ராஜபாளையம், 8:43க்கு ஸ்ரீவில்லிபுத்துார், 9:08க்கு சிவகாசி, 9:43க்கு விருதுநகர், 10:30க்கு மதுரை, 11:35க்கு திண்டுக்கல், அதிகாலை 12:50க்கு திருச்சி, 2:24க்கு விருத்தாச்சலம், 3:08க்கு விழுப்புரம், 4:48க்கு செங்கல்பட்டு வழியாக காலை 7:30 மணிக்கு பதில் 6:05 மணிக்கு தாம்பரம் செல்லும்.

செங்கோட்டை -மயிலாடுதுறை: செங்கோட்டையில் காலை 6:55 மணிக்கு புறப்படும் மயிலாடுதுறை ரயில் இனி 7:00 மணிக்கு புறப்படும். மதுரையில் காலை 10:10 மணி, திண்டுக்கல் 11:15 மணி, வடமதுரை 11:31 மணிக்கு புறப்படும் வகையில் நேரம் மாறுகிறது. மறுமார்க்கத்தில் மயிலாடுதுறையில் மதியம் 12:10 மணிக்கு புறப்படும் ரயில் இனி 12:35 மணிக்கு புறப்படும். தஞ்சாவூரில் மதியம் 1:41 மணி, திருச்சி 2:45 மணி, மணப்பாறை 3:15 மணி, வடமதுரை 3:40 மணிக்கு வந்து செல்லும்.

திருச்சி -திண்டுக்கல் : மாலை 6:10 மணிக்கு திருச்சியில் புறப்படும் திண்டுக்கல் ரயில் இனி 6:05 மணிக்கு திருச்சியில் புறப்படும். வடமதுரையில் இரவு 7:33 மணிக்கு புறப்பட்டு திண்டுக்கல் செல்லும். விழுப்புரத்தில் தற்போது மாலை 4:55 மணிக்கு புறப்படும் திண்டுக்கல் இன்டர்சிட்டி ரயில் இனி மாலை 4:30 மணிக்கு புறப்படும். திருச்சி, மணப்பாறை, வடமதுரையில் புறப்படும் நேரங்களில் மாறுதல் இல்லை.






      Dinamalar
      Follow us