அனைத்து ஏரிக்கும் அனுப்பியது தி.மு.க., ஆட்சியே: துரைமுருகன்
அனைத்து ஏரிக்கும் அனுப்பியது தி.மு.க., ஆட்சியே: துரைமுருகன்
ADDED : நவ 15, 2024 08:51 PM
வேலுார்:''மேட்டூர் அணை உபரி நீரை, அனைத்து ஏரிகளுக்கும் அனுப்பியது, தி.மு.க., ஆட்சி காலத்தில் தான்,'' என, அமைச்சர் துரைமுருகன் கூறினார்.
வேலுார் மாவட்டம், காட்பாடியில், 71வது கூட்டுறவு வார விழா நேற்று நடந்தது. கலெக்டர் சுப்புலெட்சுமி தலைமை வகித்தார். 1,444 பயனாளிகளுக்கு, 11.19 கோடி ரூபாய் மதிப்பில் கடன் உதவி, சிறந்த கூட்டுறவு நிறுவனங்களுக்கு கேடயங்களை, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வழங்கினார்.
அ.தி.மு.க., பொதுச்செயலர் இ.பி.எஸ்.,சுக்கு, விவசாயிகள் பாராட்டு விழா நடத்துவது குறித்து, நிருபர்கள் கேள்வி எழுப்பியபோது, அமைச்சர் துரைமுருகன் கூறுகையில், ''மேட்டூர் அணையிலிருந்த உபரி நீரை, ஒரே ஒரு ஏரிக்குத்தான், அ.தி.மு.க., ஆட்சி காலத்தில் அனுப்பப்பட்டது.
''தி.மு.க.,ஆட்சி காலத்தில் தான் எல்லா ஏரிகளுக்கும் தண்ணீர் அனுப்பப்பட்டது. ஆனால், அனைத்தையும் தன் ஆட்சி காலத்தில் தான் செய்தது என, பழனிசாமி கூறுகிறார். இப்படித்தான் தி.மு.க., செய்யும் விஷயங்களுக்கெல்லாம் தன்னை பாராட்டும்படி செய்து கொள்கிறார்,'' என்றார்.