தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/செந்தில் பாலாஜி வழக்கு நீதிபதி அதிருப்தி

செந்தில் பாலாஜி வழக்கு நீதிபதி அதிருப்தி

செந்தில் பாலாஜி வழக்கு நீதிபதி அதிருப்தி


UPDATED : நவ 17, 2026 08:39 PM

ADDED : நவ 17, 2026 08:36 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 17, 2026 08:39 PM ADDED : நவ 17, 2026 08:36 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: போக்குவரத்து துறை பணி நியமனங்களுக்காக, பணம் பெற்று மோசடி செய்ததாக, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் மீது, தொடரப்பட்ட வழக்கில், ஐந்து ஆண்டுகளுக்கு மேலாகியும், குற்றச்சாட்டுகள் பதிவு செய்யும் கட்டத்தை கூட, வழக்கு எட்டவில்லை என, நீதிபதி அதிருப்தி தெரிவித்தார்.

அ.தி.மு.க., ஆட்சியில், 2011 முதல் 2015 வரை, போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி. அப்போது, பணி நியமனங்களுக்கு, பணம் பெற்று மோசடி செய்ததாக, செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் உள்ளிட்டோருக்கு எதிராக, சி.பி.சி.ஐ.டி., மற்றும் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

உச்ச நீதிமன்ற உத்தரவுபடி, இந்த வழக்கில், கடந்த ஆண்டு, சென்னையில் உள்ள எம்.பி., -– எம்.எல்.ஏ.க்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்கும், சிறப்பு நீதிமன்றத்தில், மத்திய குற்றப்பிரிவு போலீசார், 25,000 பக்கங்கள் கொண்ட குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தனர்.

இந்த வழக்குகள், நீதிபதி லோகேஷ்வரன் முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தன. அப்போது, செந்தில் பாலாஜி தரப்பில், வழக்கில் இருந்து விடுவிக்க கோரி, மனு தாக்கல் செய்யப்பட்டது.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி, ‘‘வழக்கு விசாரணையை காலம் தாழ்த்தும் எந்த நடவடிக்கையையும், நீதிமன்றம் அனுமதிக்காது. வழக்கில் ஒத்துழைப்பு இல்லை எனில், நீதிமன்றம் தகுந்த உத்தரவு பிறப்பிக்க நேரிடும். அதேபோல், இந்த வழக்கு ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக நீடிக்கிறது. ஆனால், இன்னும் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யும் கட்டத்தை கூட எட்டவில்லை,’’ என தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us