sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

செந்தில் பாலாஜி ராஜினாமா: கவர்னர் ஏற்பு

/

செந்தில் பாலாஜி ராஜினாமா: கவர்னர் ஏற்பு

செந்தில் பாலாஜி ராஜினாமா: கவர்னர் ஏற்பு

செந்தில் பாலாஜி ராஜினாமா: கவர்னர் ஏற்பு


UPDATED : பிப் 13, 2024 11:33 AM

ADDED : பிப் 12, 2024 08:56 PM

Google News

UPDATED : பிப் 13, 2024 11:33 AM ADDED : பிப் 12, 2024 08:56 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: அமைச்சர் செந்தில்பாலாஜி ராஜினாமாவை கவர்னர் ஏற்றுக் கொண்டதாக, கவர்னர் மாளிகை தெரிவித்து உள்ளது.

செந்தில்பாலாஜி, அமலாக்கத் துறையால், கடந்த ஜூன் 14ம் தேதி கைது செய்யப்பட்டார். நெஞ்சு வலி ஏற்பட்டதால், ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு இதய அறுவை சிகிச்சை நடந்தது. உடல் நிலை தேறிய பின் புழல் சிறைக்கு திரும்பினார்.

செந்தில் பாலாஜி வகித்து வந்த மின்துறை நிதி அமைச்சர் பதவியை தங்கம் தென்னரசுக்கும்; மதுவிலக்கு ஆயத்தீர்வை (டாஸ்மாக்) துறை, வீட்டு வசதி அமைச்சர் முத்துசாமிக்கும் மாற்றப்பட்டது. இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிப்பார் என முதல்வர் ஸ்டாலின் முடிவு செய்தார். இது குறித்து கவர்னருக்கு கடிதம் அனுப்பினார்.

துறைகள் மாற்றத்துக்கு ஒப்புதல் அளித்த கவர்னர், 'இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிப்பதை ஏற்க முடியாது' என தெரிவித்தார். ஆனால், அதை பொருட்படுத்தாமல், 'இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிப்பார்' என முதல்வர் அறிவித்தார். அதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டது.

சிறையில் இருக்கும் செந்தில்பாலாஜி, ஜாமின் கேட்டு தாக்கல் செய்த மனுக்களை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஏழு மாதங்களுக்கு மேலாக 15 தடவைக்கு மேல் ஜாமின் மனு கேட்டு, அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டன.

ஒரு முறை அவர் வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், 'அரசு ஊழியர்கள் குற்ற வழக்கில் சிறை சென்றால் உடனே சஸ்பெண்ட் செய்யப்படுகின்றனர். ஆனால், 200 நாட்களுக்கு மேல் சிறையில் இருப்பவரை, அமைச்சராக வைத்திருப்பதன் மூலம், மக்களுக்கு இந்த அரசு என்ன சொல்ல வருகிறது?' என கேள்வி எழுப்பினார்.

இது அரசுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியது. எதிர்க்கட்சிகளும் அரசை விமர்சிக்க துவங்கின. நேற்று முன்தினம் சென்னை வந்த, பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் நட்டா, பொதுக்கூட்டத்தில் பேசும்போது, அமைச்சர் செந்தில்பாலாஜி சிறையில் அடைக்கப்பட்டுள்ளதை சுட்டிக் காட்ட்சி தி.மு.க.,வை கடுமையாக விமர்சித்தார்.

இந்த சூழலில்தான், நேற்று செந்தில் பாலாஜி சிறையில் இருந்தபடியே தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து, ராஜினாமா கடிதத்தை சிறை அதிகாரி வழியாக முதல்வருக்கு அனுப்பி வைத்தார். செந்தில் பாலாஜி எடுத்த முடிவை முதல்வர் ஏற்றுக் கொண்டால், அவரது கடிதத்தை கவர்னருக்கு அனுப்பிவைத்து, அதை ஏற்ருக் கொண்டு செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து விடுவிக்குமாறு கவர்னருக்கு பரிந்துரை செய்தார். செந்தில்பாலாஜி ராஜினாமாவை கவர்னர் ஏற்றுக் கொண்டார்.

செந்தில் பாலாஜி 2011-15 காலகட்டத்தில் ஜெயலலிதா அரசில் போக்குவரத்து அமைச்சராக இருந்தார். அப்போது சென்னை மாநகர போக்குவரத்து கழகத்துக்கு டிரைவர், கண்டக்டர் வேலைகளுக்கு ஆள் எடுப்பதில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. விண்ணப்பதாரர்களிடம் லஞ்சம் பெற்றதாக செந்தில் பாலாஜி மீதும் அவருடைய தம்பி அசோக் குமார் மீதும் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. பண மோசடி வழக்கு பதிவு செய்து அமலாக்க துறை பல இடங்களில் சோதனை நடத்தியது. அதை தொடர்ந்து செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். தம்பி அசோக் தலைமறைவானார்.

கைதான பிறகும் அமைச்சராக நீடிப்பதால், செந்தில் பாலாஜியை வெளியே விட்டால் சாட்சிகளை கலைத்து விடுவார் என அமலாக்கத்துறை ஆட்சேபம் தெரிவித்து வந்ததால் ஜாமின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டு வந்தன. இப்போது அவர் ராஜினாமா செய்து விட்டதால், ஜாமின் கிடைப்பதற்கு வாய்ப்பு உருவாகி இருப்பதாக சட்ட நிபுணர்கள் கூறுகின்றனர். அசோக்கும் விரைவில் சரண் அடைவார் என கூறப்படுகிறது.






      Dinamalar
      Follow us