ஜாமின் கேட்டு செந்தில்பாலாஜி 3வது முறையாக மனு: அமலாக்கத்துறைக்கு நோட்டீஸ்
ஜாமின் கேட்டு செந்தில்பாலாஜி 3வது முறையாக மனு: அமலாக்கத்துறைக்கு நோட்டீஸ்
UPDATED : ஜன 03, 2024 12:45 PM
ADDED : ஜன 03, 2024 12:28 PM

சென்னை: சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கைதாகி சிறையில் உள்ள அமைச்சர் செந்தில்பாலாஜி, ஜாமின் கேட்டு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் 3வது முறையாக மனு தாக்கல் செய்தார். இது தொடர்பாக பதிலளிக்க அமலாக்கத்துறைக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
அமைச்சர் செந்தில்பாலாஜி, சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில், கடந்த ஆண்டு ஜூன் 14ம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர், ஜாமின் கேட்டு இரண்டு முறை தாக்கல் செய்த மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இந்நிலையில், இன்று மீண்டும் ஜாமின் கேட்டு செந்தில்பாலாஜி மனு தாக்கல் செய்துள்ளார். இதனை விசாரித்த நீதிபதி அல்லி, மனு குறித்து பதிலளிக்க அமலாக்கத்துறைக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, வழக்கை ஜன.,8ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.