உள்ளடக்கத்திற்கு செல்ல
ADDED : ஆக 19, 2026 11:04 PM
அ நிறம் | அளவு
சென்னை: தமிழக ரேஷன் கடைகளில் உள்ள, 'பாயின்ட் ஆப் சேல்' எனப்படும், விற்பனை முனைய கருவி யில், கார்டுதாரர்களின் விரல் ரேகை பதிவு செய்யப்பட்டு, உணவுப் பொருட்கள் வழங்கப்படுகின்றன.
இந்த கருவியின் இயக்கத்திற்கான, 'சர்வர்' தொழில்நுட்ப கோளாறால், கடந்த திங்கள் கிழமை முடங்கியது. அன்று, பொருட்கள் வாங்க முடியாமல், கார்டுதாரர்க ள் பாதிக்கப்பட்டனர்.
நேற்று மூன்றாம் நாளாக, சர்வர் பிரச்னை தொடர்ந்ததால், கடைகளில் பொருட்கள் வாங்க சென்றவர்கள், ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
இது குறித்து, உணவுத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'கருவியில் ஆதார் சரிபார்ப்பில் ஒப்புதல் தருவதில் ஏற்படும் தாமதத்தால் தான், கடைகளில் பொருட்கள் வழங்குவதில் தாமதம் ஏற்படுகிறது. நேற்று காலை, 11:30 மணிக்கு மேல் இந்த பிரச்னை ஏற்படவில்லை' என்றார்.
