தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/லேப் அமைத்து மெத்தபெட்டமைன் போதைப்பொருள் தயாரிக்கின்றனர்: பா.ஜ., நிர்வாகி பகீர் புகார்

லேப் அமைத்து மெத்தபெட்டமைன் போதைப்பொருள் தயாரிக்கின்றனர்: பா.ஜ., நிர்வாகி பகீர் புகார்

லேப் அமைத்து மெத்தபெட்டமைன் போதைப்பொருள் தயாரிக்கின்றனர்: பா.ஜ., நிர்வாகி பகீர் புகார்

1


UPDATED : அக் 08, 2026 07:52 PM

ADDED : அக் 08, 2026 07:46 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 08, 2026 07:52 PM ADDED : அக் 08, 2026 07:46 PM

1


1
Follow on Google
அ நிறம் | அளவு

காரைக்குடி:

ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில், அதிக அளவில் போதைப்பொருள் தயாரிக்கப்படுவதாக, பா.ஜ., சிறுபான்மை பிரிவு செயலர் வேலுார் இப்ராஹிம் தெரிவித்தார்.

காரைக்குடியில் நடந்த, போதை விழிப்புணர்வு யாத்திரையில் பங்கேற்ற பின், இப்ராஹிம் கூறியதாவது:

இளையான்குடி மற்றும் கடற்கரை பகுதிகளான அம்மா பட்டினம் அதிராம்பட்டினம் உள்ளிட்ட இடங்களில் ‘மெத்தபெட்டமைன்’ என்ற போதைப்பொருளை உற்பத்தி செய்கின்றனர். ஒவ்வொரு இடத்திலும், சிறிய ‘லேப்’ அமைத்து, ஒன்றரை கோடி ரூபாய் முதல் இரண்டு கோடி ரூபாய் வரை, மாத வருமானம் ஈட்டுகின்றனர்.

இதற்கு பின், எந்த அமைப்பு இருக்கிறது என்பதை அரசு கண்டறிய வேண்டும். ஆனால், போலீஸ் வேடிக்கை பார்க்கிறது. ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் தான், போதைப்பொருள் தயாரிப்பு அதிகம் நடைபெறுகிறது. சமூக பொறுப்பை உணர்ந்து, பா.ஜ., சார்பில் விழிப்புணர்வு செய்து வருகிறோம்.

‘பொது சிவில் சட்டம், முஸ்லிம்களுக்கு எதிரானது’ என த.வெ.க.,வும், தி.மு.க.வும் கூறி வருகின்றன. முஸ்லிம்களின் உரிமைகளுக்காக குரல் கொடுக்காமல், உணர்வுகளை துாண்டும் அரசியலை செய்கின்றனர். பொது சிவில் சட்டம், திருமணத்தை பதிவு செய்ய சொல்கிறது. இதில் என்ன தவறு? மதத்தால், மொழியால், ஜாதியால் யாரையுமே பா.ஜ., பிளவுபடுத்தி பார்க்கவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us