sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 15, 2025 ,புரட்டாசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

இரண்டாம் கட்ட காசி தமிழ் சங்கமம்; வாரணாசிக்கு ஏழு பிரத்யேக ரயில்கள்

/

இரண்டாம் கட்ட காசி தமிழ் சங்கமம்; வாரணாசிக்கு ஏழு பிரத்யேக ரயில்கள்

இரண்டாம் கட்ட காசி தமிழ் சங்கமம்; வாரணாசிக்கு ஏழு பிரத்யேக ரயில்கள்

இரண்டாம் கட்ட காசி தமிழ் சங்கமம்; வாரணாசிக்கு ஏழு பிரத்யேக ரயில்கள்


UPDATED : டிச 09, 2023 12:29 AM

ADDED : டிச 08, 2023 09:55 PM

Google News

UPDATED : டிச 09, 2023 12:29 AM ADDED : டிச 08, 2023 09:55 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:இரண்டாம் கட்ட காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்காக, தமிழகத்தில் இருந்து வாரணாசிக்கு, ஏழு பிரத்யேக ரயில்களை இயக்க, தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது.

கலாசார மையங்களாக திகழ்ந்த வாரணாசிக்கும், தமிழகத்திற்கும் இடையேயான பிணைப்பை புதுப்பிக்கும் வகையில், காசி தமிழ் சங்கமத்தின் முதல் கட்ட நிகழ்வு, கடந்த ஆண்டு துவங்கியது.

தமிழகத்தில் இருந்து மாணவர்கள், ஆசிரியர்கள், எழுத்தாளர்கள், ஆன்மிகவாதிகள், வியாபாரிகள், தொழில் அதிபர்கள் உட்பட, பல்வேறு தரப்புகளை சேர்ந்த 2,500க்கும் மேற்பட்டோர், வாரணாசி, பிரயாக்ராஜ் மற்றும் அயோத்திக்கு சுற்றுப்பயணம் செய்தனர்.

இந்நிலையில், 'ஒரே பாரதம் உன்னத பாரதம்' திட்டத்தின் கீழ், காசி தமிழ் சங்கமத்தின் இரண்டாம் கட்ட நிகழ்வு, வரும், 17ம் தேதி துவங்கி, 30ம் தேதி வரை நடத்தப்பட உள்ளது.

இதற்கான எற்பாடுகளை, சென்னை ஐ.ஐ.டி., கல்வி நிறுவனம் ஒருங்கிணைத்து செயல்படுத்தி வருகிறது. தமிழகத்தில் இருந்து பிரத்யேகமாக, ஏழு ரயில்களை இயக்க, தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது.

இது குறித்து, தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:

இந்தியாவில் இரு முக்கிய கற்றல், கலாசார மையங்களாக திகழ்ந்த வாரணாசிக்கும், தமிழகத்திற்கும் இடையேயான வாழ்க்கை பிணைப்பை புதுப்பிக்கும் வகையில், காசி தமிழ் சங்கமம் துவக்கப்பட்டது; இரண்டாவது கட்டமாக, இந்த ஆண்டும் செயல்படுத்தப்பட உள்ளது.

கடந்தாண்டில், விரைவு ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைத்து இயக்கப்பட்டன. இந்த ஆண்டில் பிரத்யேகமாகவே, ஏழு சிறப்பு ரயில்களை இயக்க உள்ளோம். இதில், மூன்றாம் வகுப்பு, 'ஏசி' பெட்டிகள் மூன்று இணைத்து இயக்க உள்ளோம்.

இந்த பெட்டிகள், தனித்துவமாக தெரியும் வகையில், உள்பகுதி மற்றும் வெளிபகுதிகளில் கலாசார பண்பாட்டை எடுத்துரைக்கும் வகையில், அலங்காரம் செய்யப்படும். மற்ற பெட்டிகளில் வழக்கமான பயணியர் பயணம் செய்ய அனுமதிக்கப்படுவர்.

முதல் ரயில், வரும் 15ம் தேதி, சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்பட்டு, 17ம் தேதி வாரணாசி செல்லும். இரண்டாவது ரயில், 16ம் தேதி கன்னியாகுமரியில் புறப்பட்டு, எழும்பூர் வழியாக வாரணாசிக்கு இயக்கப்படும்.

மூன்றாவது ரயில், 19ம் தேதி கோவையில் இருந்தும், நான்காவது ரயில், 20ம் தேதி கன்னியாகுமரியில் இருந்தும் புறப்படும். ஐந்தாவது ரயில், 23ம் தேதி சென்ட்ரலில் இருந்தும், ஆறாவது ரயில், 25ம் தேதி கோவையில் இருந்தும், ஏழாவது ரயில் சென்ட்ரலில் இருந்தும் புறப்படும்.

ஒவ்வொரு பயணமும், எட்டு நாட்கள் இருக்கும். இதற்கான ஏற்பாடுகளை, சென்னை ஐ.ஐ.டி., ஒருங்கிணைத்து செயல்படுத்தி வருகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us