தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/மாணவிக்கு பாலியல் தொல்லை; தலைமை ஆசிரியர் கைது

மாணவிக்கு பாலியல் தொல்லை; தலைமை ஆசிரியர் கைது

மாணவிக்கு பாலியல் தொல்லை; தலைமை ஆசிரியர் கைது


ADDED : மார் 16, 2024 08:08 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 16, 2024 08:08 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே ஒரு கிராமத்தில் அரசு நடுநிலைப்பள்ளியில் 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். 5 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். பிரிட்டோ 55, என்பவர் தலைமை ஆசிரியராக உள்ளார்.

நேற்று காலை 6ம் வகுப்பு மாணவி ஒருவர் வகுப்பறையில் உட்கார்ந்து எழுதிக் கொண்டிருந்தபோது மாணவியை பிரிட்டோ ஆடையை கிழித்து பாலியல் தொந்தரவு செய்ததாக மாணவி புகார் கூறியுள்ளார்.

தகவல் அறிந்த அவரது பெற்றோர், கிராம மக்கள் பள்ளியை முற்றுகையிட்டு தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

இன்ஸ்பெக்டர் தெய்வீக பாண்டியன், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் மாரிமுத்து தலைமை ஆசிரியர், மாணவியின் பெற்றோர், கிராம மக்களிடம் விசாரணை நடத்தினர். மேல் விசாரணைக்காக அவரை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றனர்.

பிரிட்டோ கூறுகையில், அந்த மாணவி எழுதிக் கொண்டிருந்தபோது கையில் ஒரு பேப்பரை வைத்திருந்தார், அதை கேட்ட போது கொடுக்கவில்லை. அதை வாங்கிய போது கை தவறி அவரது மேல் சட்டை கிழிந்தது. அவரை வீட்டிற்கு சென்று வேறு சட்டை மாற்றி வருமாறு கூறினேன் என்றார். இந்நிலையில் போலீசார் பிரிட்டோவை போக்சோவில் கைது செய்தனர்.

முகமூடி அணிந்து தந்தை, மகனை வெட்டிக்கொலை செய்ய முயற்சி


ராமநாதபுரம் மாவட்டம் சக்கரக்கோட்டை பள்ளிவாசல் தெருவில் முகமூடி அணிந்து தந்தை, மகனை கத்தியால் வெட்டி கொலை செய்ய முயன்ற மர்மநபர்களை போலீசார் தேடுகின்றனர்.

சக்கரக்கோட்டை அருகே பள்ளிவாசல்தெருவை சேர்ந்த முகமது பாரூக் 64. இவரது மகன் முகமது தமீம் 45, இருவரும் வீட்டில் இருந்துள்ளனர். மதியம் 3:30 மணிக்கு முகமூடி அணிந்து வீட்டுக்குள் புகுந்த மர்மநபர்கள் இருவரையும் கத்தியால் கழுத்து, கை ஆகிய பகுதிகளில் வெட்டிக்காயம் ஏற்படுத்திவிட்டு தப்பி சென்றனர். இருவரும் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கேணிக்கரை போலீசார் விசாரிக்கின்றனர். காரணம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

துப்பாக்கி வைத்திருந்தவர் கைது


தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே ஆனைகுளத்தை சேர்ந்தவர் மாயகிருஷ்ணன் என்ற சரவணன் 38. ரியல் எஸ்டேட் மற்றும் பழைய கார் வாங்கி விற்பனை செய்து வந்தார். நேற்று அவர் ஒரு காரில் நண்பர்கள் இருவருடன் அம்பாசமுத்திரம் சென்று கொண்டிருந்தார்.

கிருஷ்ணன் கோவில் அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். காரில் ஒரு ரிவால்வர் துப்பாக்கியும் 5 தோட்டாக்களும் இருந்தன.

மாயகிருஷ்ணனிடம் விசாரித்தபோது, ரியல் எஸ்டேட் தொழில் நஷ்டம் அடைந்ததால் துப்பாக்கி வாங்கி விற்கும் தொழில் துவங்கியதாகவும் துப்பாக்கியை கேரளாவில் நண்பரிடம் வாங்கியதாகவும், அம்பாசமுத்திரத்தில் ஒருவருக்கு விற்க வந்ததாகவும் கூறினார்.

இதையடுத்து மாயகிருஷ்ணன், காரில் இருந்த அவரது நண்பர்கள் ஆய்க்குடி பழனிக்குமார், சுரண்டை சிவலிங்கம் ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர். மாயகிருஷ்ணன் தந்த தகவலின் பெயரில் கேரளா மாநிலம் மூணாறில் போலீசார் நேரடியாக சென்று விசாரணை மேற்கொண்டதில் துப்பாக்கி சப்ளை செய்த மீரான் மற்றும் சிவா ஆகியோரை பிடித்து விசாரணைக்கு அழைத்து வந்தனர்.

தொழிலதிபர் வீட்டில் 177 சவரன் கொள்ளை


கோவை, பீளமேடு செங்காளியப்பா நகரைச் சேர்ந்தவர் மனோகரன், 64, தொழிலதிபர்; இவரது மனைவி திருச்சியில் உள்ள, மகள் வீட்டில் வசித்து வருகிறார். அவர்களை காண, மனோகரன் கடந்த மாதம், 23ம் தேதி திருச்சி சென்றார். அங்கு அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால், அங்கேயே தங்கினார்.

இந்நிலையில், அவரது வீட்டின் முன்பக்கக் கதவை உடைத்து, பீரோவில் இருந்த, 177 சவரன் தங்க நகை மற்றும் 10 லட்சம் ரூபாயை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். தகவல் அறிந்து வந்த மனோகரன், இதுகுறித்து பீளமேடு போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.

மின்சார ரயிலில் கத்தியால் தாக்கி மொபைல்போன் திருடிய 2 பேர் கைது


சென்னை, கும்மிடிப்பூண்டி சேர்ந்த மவுலீஸ், 24, என்பவர் கடந்த 6ம் தேதி, தன் மூன்று நண்பர்களுடன், சென்னை கடற்கரையில் இருந்து கும்மிடிப்பூண்டி வரை, மின்சார ரயிலில் பயணம் செய்துள்ளார் . கவரப்பேட்டை ரயில் நிலையம் வந்தபோது, திடீரென ஐந்து பேர் ரயிலில் ஏறி, பயணியரிடம், மொபைல்போன், பர்சை கேட்டுள்ளனர்.

தர மறுத்ததால், மவுலீஸ் மற்றும் அவரது மூன்று நண்பர்களையும் கத்தியால் குத்தி காயப்படுத்தி, நான்கு மொபைல்போன்கள் மற்றும் 5,500 ரூபாயை பறித்து, தப்பி விட்டனர். இது குறித்து, மவுலீஸ் கொடுத்த புகாரின்படி, கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து, கும்மிடிப்பூண்டியை சேர்ந்த லெவின், 26, திருப்பாலைவனம் பகுதியை சேர்ந்த விஜி, 24, ஆகியோரை கைது செய்தனர்.

சிறுமி கூட்டு பலாத்காரம்; மேலும் ஒருவர் கைது


திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவிலில், கடந்த 9ம் தேதி இரவு, கோவில் தேர்த்திருவிழா கலை நிகழ்ச்சியைப் பார்க்க வந்த, 17 வயதுடைய சிறுமி ஒருவரை, ஒரு கும்பல் கடத்திச் சென்று கூட்டாகச் சேர்ந்த பலாத்காரம் செய்து விட்டு தப்பியது.

இது குறித்த புகாரின் பேரில் ஏற்கனவே 7 பேர் கைதாகினர். இது தொடர்பாக, தலைமறைவான ஒருவரை போலீசார் தேடினர். அவர், கேரளாவில், பதுங்கியிருந்த நிலையில் நேற்று கைது செய்யப்பட்டார். விசாரணையில், புதுக்காட்டைச் சேர்ந்த மோகன்குமார், 31 என்பது தெரிந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us