சிறுமிகளுக்கு பாலியல் துன்புறுத்தல்: கிறிஸ்துவ மதபோதகருக்கு போலீஸ் வலை!
சிறுமிகளுக்கு பாலியல் துன்புறுத்தல்: கிறிஸ்துவ மதபோதகருக்கு போலீஸ் வலை!
ADDED : ஏப் 07, 2025 06:41 PM

கோவை: சிறுமிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த மதபோதகர் மீது போலீசார் வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.
கோவை கிராஸ்கட் ரோட்டில் உள்ள பிரார்த்தனை கூடத்தின் மதபோதகர் ஜான் ஜெபராஜ், 37. இவர் கோவை ஜி.என்.மில்ஸ் பகுதியில் குடியிருந்து வருகிறார்.
கடந்த, 11 மாதங்களுக்கு முன், இவர் தனது வீட்டில் விருந்து ஒன்றை நடத்தினார். அதில் இவரது மாமனார் தத்து எடுத்த, 17 வயது சிறுமி பங்கேற்றார். சிறுமியுடன் அவரது அண்டை வீட்டு, 14 வயது சிறுமியும் உடன் வந்திருந்தார். விருந்தின் போது, இரு சிறுமிகளுக்கும், ஜான் ஜெபராஜ் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
தொடர்ந்து சிறுமிகளிடம் இதுகுறித்து யாரிடமும் கூற வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளார். இந்நிலையில், சமீபத்தில், 14 வயது சிறுமி தனது பெற்றோரிடம் இதுகுறித்து தெரிவித்தார். இதையடுத்து அவர்கள் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்தனர். தலை மறைவாக உள்ள ஜான் ஜெபராஜை தேடி வருகின்றனர்.