sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கடும் சட்டங்கள் இருந்தால் தான் பாலியல் சம்பவங்களை தடுக்க முடியும்; அரசுக்கு சீமான் வலியுறுத்தல்

/

கடும் சட்டங்கள் இருந்தால் தான் பாலியல் சம்பவங்களை தடுக்க முடியும்; அரசுக்கு சீமான் வலியுறுத்தல்

கடும் சட்டங்கள் இருந்தால் தான் பாலியல் சம்பவங்களை தடுக்க முடியும்; அரசுக்கு சீமான் வலியுறுத்தல்

கடும் சட்டங்கள் இருந்தால் தான் பாலியல் சம்பவங்களை தடுக்க முடியும்; அரசுக்கு சீமான் வலியுறுத்தல்

22


ADDED : நவ 04, 2025 05:08 PM

Google News

22

ADDED : நவ 04, 2025 05:08 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருச்சி: கடும் சட்டங்கள் இருந்தால் தான் பாலியல் சம்பவங்களை தடுக்க முடியும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

திருச்சியில் நிருபர்களிடம் சீமான் கூறியதாவது: இலங்கை மொத்த கடற்பரப்பையும் தன்னுடையது போல் நினைத்துக் கொண்டு தொடர்ச்சியாக கைது செய்கிறது.தமிழர்கள் எங்களுடைய மீனை திருடிக் கொண்டு போகிறார்கள் என்று இலங்கை சொல்கிறது.இதுபோல் ஒரு நடிகரை பார்க்க மக்கள் கூடுவது தவறு அதைத்தான் நடிகர் அஜித் சொல்கிறார். அமெரிக்கா போல் அனைத்து தலைவர்களுக்கும் பேச ஒரு இடம் நேரம் கொடுத்து அதை உங்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்புங்கள்.

கோவையில் பெண்களுக்கு எதிரான பாலியல் நிகழ்வு போல், பல நிகழ்வுகள் வெளியே தெரியாமல் இருக்கிறது. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துவிட்டது. ஒரு பாதுகாப்பற்ற சூழலில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோமோ என்ற நடுக்கத்தை ஏற்படுத்துகிறது.

கடுமையான தண்டனைச் சட்டம் மூலம்தான் இதனை தடுக்க முடியும். நிறைந்த மது போதையே இது போன்ற குற்றங்கள் தொடர்வதற்கு காரணம்.

ஜாதிவாரி கணக்கெடுப்பை எடுக்காத திமுக, அதிமுக சமூகநீதி, சமத்துவம் , துரோகம் பற்றி பேசுவதற்கு தகுதியற்றவர்கள். ஜெயலலிதா காலில் விழுந்ததோடு கார் டயரிலும் விழுந்தவர்கள்தானே அதிமுகவினர். அவர்கள் யாராவது நிமிர்ந்து நின்றதை பார்த்திருக்கிறீர்களா . இது விமர்சனம் அல்ல உண்மை .

தாழ்த்தப்பட்டவர்களுக்கான இடப் பங்கீட்டில் இருந்து அருந்ததியர்களுக்கு உள் ஒதுக்கீடு என்கிற பெயரில் எடுத்துக் கொடுத்ததோடு மீதம் இருக்கும் இடத்திலும் அருந்ததியர்களுக்கு முன்னுரிமை என்று கையெழுத்து போட்டதுதான் சமூக நீதியா? 2026ல் கட்சிகளுக்கு போட்டிகள் கிடையாது. கருத்தியலுக்கு தான் போட்டி.

இலவசத்தை ஆதரிப்பவர்களுக்கும் இலவசத்தை எதிர்ப்பவர்களுக்கும் தான் போட்டி. நாங்கள் திராவிடர்கள் என்று நினைப்பவர்களுக்கும் இல்லை. நாங்கள் ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு மூத்த இனமான தமிழர்கள் என்று நினைப்பவர்களுக்கும் தான் போட்டி. இந்தியர்களுக்கு மும்மொழி கொள்கை திராவிடர்களுக்கு இரு மொழி கொள்கை எங்களுக்கு கொள்கை மொழி ஒரே மொழி அது எங்கள் தாய்மொழியான தமிழ் மொழி. இவ்வாறு சீமான் கூறினார்.






      Dinamalar
      Follow us