கவர்னர் தரம் தாழ்ந்த அரசியல் செய்யும் அவலம்: ஸ்டாலின் குற்றச்சாட்டு
கவர்னர் தரம் தாழ்ந்த அரசியல் செய்யும் அவலம்: ஸ்டாலின் குற்றச்சாட்டு
ADDED : ஜன 18, 2024 01:40 PM

சென்னை: கவர்னர்கள் மலிவான தரம் தாழ்ந்த அரசியல் செய்யும் அவலத்தை இந்தியா இப்போதுதான் காண்கிறது என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: கவர்னர்கள் மலிவான தரம் தாழ்ந்த அரசியல் செய்யும் அவலத்தை இந்தியா இப்போது தான் காண்கிறது. அவர்கள், தங்களுக்கு வழங்கப்பட்ட உயர்ந்த பொறுப்புக்கு சிறிதும் தகுதி இல்லாதவர்களாக உள்ளனர். திருவள்ளுவர் துவங்கி தெருவில் நடந்து செல்வோர் வரை எல்லோர் மீதும் காவிச்சாயம் பூசுகின்றனர்.
மத்திய அரசு செய்யும் மூர்க்கத்தன அரசியலை ஜனநாயக வழியில் முறியடிக்கும் வலிமை திமுக.,வுக்கு உண்டு. கவர்னர்களை வைத்து போட்டி அரசை நடத்த நினைப்பது அரசியலமைப்புக்கு எதிரானது. பாஜ,வின் 10 ஆண்டுகால ஆட்சியில் மாநிலங்களின் உரிமை பறிபோயுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் ஸ்டாலின் கூறியுள்ளார்.