ADDED : பிப் 12, 2025 08:08 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலை, அவரது இல்லத்தில், அமைச்சர் சேகர்பாபு சந்தித்தார்.
சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள கமல் வீட்டுக்கு, அமைச்சர் சேகர்பாபு சென்றார். கமலை சந்தித்து, ஒரு மணி நேரம் பேசினார். ம.நீ.ம., துணை தலைவர் அருணாசலம் உடனிருந்தார்.
இதுகுறித்து, ம.நீ.ம., நிர்வாகிகள் கூறியதாவது:
கடந்த 4 மாதங்களாக, அமெரிக்காவில் தங்கியிருந்த கமல், கடந்த வாரம் தான் சென்னை திரும்பினார். வரும் ஜூன் மாதம் நடக்கவுள்ள ராஜ்யசபா எம்.பி., தேர்தலில், தி.மு.க., ஆதரவுடன் போட்டியிட இருக்கிறார். அது பற்றியும், மார்ச் 1ல் முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளை ஒட்டி, சென்னையில் நடக்கிற பொதுக்கூட்டத்தில் கமல் பங்கேற்பது குறித்தும், இருவரும் பேசியுள்ளனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.