ADDED : பிப் 08, 2025 12:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வசந்தகுமாரை, மாணவியின் உறவினர்கள் அடித்து துவைத்த போது, மாணவியும் உடன் இருந்துள்ளார்.
இதுதொடர்பாக, 6 நிமிடங்களுக்கு மேல் ஓடும் வீடியோவை மாணவியின் உறவினர் எடுத்துள்ளார். அந்த வீடியோ, தற்போது மாணவியை அடையாளப்படுத்திக் காட்டும் வகையில் வலைதளங்களில் பரவி வருகிறது.
பொதுவாக இதுபோன்ற வழக்குகளில் பாதிக்கப்படுவோர் மற்றும், 18 வயதுக்குட்பட்டோரை அடையாளப்படுத்தும் விதமாக எந்த செயலும் செய்யக்கூடாது. அப்படியிருக்கையில், மாணவி முகத்தைக் காட்டும் வீடியோ பரவி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.