முடிவெட்டும்போது எம்எல்ஏ மகன் காதை 'கட்' செய்த கடை ஊழியர்: சேலத்தில் சம்பவம்
முடிவெட்டும்போது எம்எல்ஏ மகன் காதை 'கட்' செய்த கடை ஊழியர்: சேலத்தில் சம்பவம்
ADDED : ஜன 03, 2024 12:17 PM

சேலம்: சேலம் மேற்கு தொகுதி எம்எல்ஏ மகன் ரவிதாஸ் முடிவெட்டும்போது கடை ஊழியர் காதை வெட்டியதால் பிரச்னையானது. பின்னர் இரு தரப்பும் பேச்சுவார்த்தை நடத்தி சமரசமாகினர்.
சேலம் மேற்கு சட்டசபை தொகுதி பாமக எம்எல்ஏ.,வாக இருப்பவர் அருள் ராமதாஸ். இவரது மகன் ரவிதாஸ் (வயது 22) கடந்த ஜனவரி 1ம் தேதி காலையில் சேலம் சூரமங்கலத்தில் உள்ள அழகு நிலையம் ஒன்றில் முடி வெட்ட சென்றார். அவருக்கு கடை ஊழியர் ஹர்சன் ராய் என்பவர் முடி வெட்டியுள்ளார். அப்போது கவனக்குறைவாக முடியுடன் சேர்த்து காதில் இரு இடத்தில் கடை ஊழியர் வெட்டியுள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த ரவிதாஸ், கடை ஊழியரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இது தொடர்பாக போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளிக்கப்பட்டது. பின்னர், எம்எல்ஏ தரப்பு மற்றும் கடை ஊழியர் தரப்பு சமரசம் பேசி, பிரச்னையை முடிவுக்கு கொண்டு வந்தனர். எம்.எல்.ஏ.,வின் மகன் காது வெட்டப்பட்ட சம்பவத்தால் சேலத்தில் பரபரப்பு நிலவியது.