மேகதாது அணைக்கு அனுமதி அளிக்க மோடியிடம் சித்தராமையா கோரிக்கை
மேகதாது அணைக்கு அனுமதி அளிக்க மோடியிடம் சித்தராமையா கோரிக்கை
ADDED : நவ 30, 2024 12:50 AM

புதுடில்லி: மேகதாது திட்டத்துக்கு அனுமதி அளிக்கும்படி, பிரதமர் மோடியிடம் கர்நாடக முதல்வர் சித்தராமையா வேண்டுகோள் விடுத்தார்.
பிரதமர் நரேந்திர மோடியை, டில்லியில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று கர்நாடக காங்., அரசின் முதல்வர் சித்தராமையாவும், துணை முதல்வர் சிவகுமாரும் சந்தித்து பேசினர்.
அப்போது பிரதமர் மோடியிடம், 'கர்நாடகா போன்ற மாநிலத்தில் நீர்ப்பாசன திறனை பலப்படுத்துவது அவசியம். பெரும்பாலான மாநிலங்கள், தங்களிடம் உள்ள நீர் வளத்தை பயன்படுத்தி, நீர்ப்பாசன வசதியை செய்து கொள்கின்றன.
ஆனால் மத்திய ஜல் சக்தி அமைச்சகம், சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை எங்களின் திட்டங்களுக்கு அனுமதி அளிக்க தாமதம் காட்டுகின்றன.
'குறிப்பாக, மேகதாது திட்டத்துக்கு அனுமதி கிடைக்கவில்லை. இத்திட்டத்துக்கு விரைவில் அனுமதி அளிக்கும்படி, சம்பந்தப்பட்ட துறைகளுக்கு உத்தரவிட வேண்டும். அதேபோல் மஹதாயி, பத்ரா மேலணை போன்ற நீர்ப்பாசன திட்டங்களுக்கும் அனுமதி அளிக்க வேண்டும்' என, சித்தராமையா வலியுறுத்தினார்.
உரிய நடவடிக்கை எடுப்பதாக, பிரதமர் மோடி உறுதி அளித்தார்.