தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/சித்தா, யுனானி முதுநிலை படிப்பு விண்ணப்ப பதிவு துவக்கம்

சித்தா, யுனானி முதுநிலை படிப்பு விண்ணப்ப பதிவு துவக்கம்

சித்தா, யுனானி முதுநிலை படிப்பு விண்ணப்ப பதிவு துவக்கம்


ADDED : அக் 24, 2026 10:51 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 24, 2026 10:51 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: சித்தா, யுனானி முதுநிலை மருத்துவ படிப்பு களுக்கான, மாணவர் சேர்க்கை விண்ணப்ப பதிவு இன்று தொடங்குகிறது.

இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி இயக்குநரகத்தின் கீழ் இயங்கும் அரசு கல்லுாரிகளில், எம்.டி., சித்தா, யுனானி முதுநிலை மருத்துவ பட்டப் படிப்புகளுக்கும், தனியார் கல்லுாரிகளில் உள்ள, எம்.டி., ஹோமியோபதி மருத்துவ படிப்புக்கும், 2026 – 27ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பப்பதிவு துவங்கியுள்ளது.

தேசிய தேர்வுகள் முகமை நடத்தும், அகில இந்திய ஆயுஷ் முதுநிலை நுழைவுத்தேர்வு மதிப்பெண் அடிப்படையில், மாணவர் சேர்க்கை நடக்கிறது.

இளநிலை படிப்பை நிறைவு செய்தவர்கள், www.tnayushselection.org என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவு செய்யலாம்.

பூர்த்தி செய்த விண்ணப்பத்தை, ‘செயலர், தேர்வுக்குழு, இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை இயக்குநர் அலுவலகம், அறிஞர் அண்ணா அரசினர் இந்திய மருத்துவமனை வளாகம், அரும்பாக்கம், சென்னை – 600106 என்ற முகவரியில், நவம்பர், 3ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்’ என, இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி இயக்குநரகம் அறிவித்து உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us