உள்ளடக்கத்திற்கு செல்ல
UPDATED : நவ 17, 2026 07:21 PM
ADDED : நவ 17, 2026 07:18 PM
அ நிறம் | அளவு
சேலம்: மாணவியரை வர்ணித்து, போக்சோ வழக்கில் சிக்கிய ஆசிரியர் சங்கர், 49, என்பவரை, ‘சஸ்பெண்ட்’ செய்து, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.
சேலம் மாவட்டம், ஆத்துார் விநாயகபுரத்தை சேர்ந்தவர் சங்கர். இவர், கல்பகனுார் அரசு மேல்நிலைப்பள்ளி சமூக அறிவியல் ஆசிரியர். இவர், வகுப்பில், 10ம் வகுப்பு மாணவியரிடம் வர்ணித்து பேசியது, சைகை காட்டுவது என, தொல்லை கொடுத்துள்ளார்.
மாணவியர், தலைமை ஆசிரியரிடம் தெரிவித்தனர். குழந்தைகள் நல அலுவலர் மற்றும் கல்வி அலுவலர்கள் மாணவியரிடம் விசாரணை நடத்தினர். அதன் அடிப்படையில், ஆத்துார் மகளிர் போலீசார் போக்சோ வழக்கில், சங்கரை சிறையில் அடைத்தனர். நேற்று அவரை சஸ்பெண்ட் செய்து, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் எல்லப்பன் உத்தரவிட்டுள்ளார்.
