ADDED : பிப் 05, 2026 02:53 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: தமிழகத்தில் நேற்று, வெள்ளி கிலோவுக்கு 20,000 ரூபாய் அதிகரித்தது.
சர்வதேச நிலவரங்களால், நம் நாட்டில் தங்கம், வெள்ளி விலைகள் உயர்ந்து வருகின்றன. தமிழகத்தில் நேற்று முன் தினம், 22 காரட் ஆபரண தங்கம் கிராம், 14,270 ரூபாய்க்கும், சவரன், 1,14,160 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம், 300 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
நேற்று, தங்கம் விலை கிராமுக்கு, 630 ரூபாய் உயர்ந்து, 14,900 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 5,040 ரூபாய் அதிகரித்து, 1,19,200 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
வெள்ளி கிராமுக்கு, 20 ரூபாய் உயர்ந்து, 320 ரூபாய்க்கு விற்பனையானது. கிலோவுக்கு, 20,000 ரூபாய் அதிகரித்து, 3.20 லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்டது.

