ADDED : ஜன 11, 2024 07:25 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை : சென்னையில் முதல்வர் ஸ்டாலினை சிங்கப்பூர் சட்டம் மற்றும் உள்துறை அமைச்சர் சண்முகம் சந்தித்து பேசினார்.
இது குறித்து முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் வலை தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது: எனது சிங்கப்பூரின் பயணத்தின் போது விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்று உலக தமிழ் புலம் பெயர்ந்தோர் தின கொண்டாட்டத்தில் பங்கேற்க அந்நாட்டின் அமைச்சர் சண்முகம் வருகை தந்துள்ளார்.
இந்த சந்திப்பு கல்வி, கலாச்சாரம் மற்றும் தொழில் உள்ளிட் பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பு வளர்ப்பதற்கான பெரும் வாக்குறுதியை கொண்டுள்ளது. தமிழ்நாடு மற்றும் இந்தியாவின் முன்னேற்ற வளர்ச்சிக்கு பெரும் பங்களிப்பை அளிக்கும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பதிவிட்டு உள்ளார்.

