எஸ்.ஐ.ஆரால் ஓட்டு குறையாது: கார்த்தி எம்.பி., கருத்து
எஸ்.ஐ.ஆரால் ஓட்டு குறையாது: கார்த்தி எம்.பி., கருத்து
ADDED : நவ 29, 2025 12:47 AM

சிவகங்கை: ''எஸ்.ஐ.ஆர்., பணிகளால் ஓட்டு குறையாது. இறந்தவர்கள் ஓட்டு மட்டுமே நீக்கப்படுகிறது,'' என, சிவகங்கையில் கார்த்தி எம்.பி., தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: தமிழக வெற்றி கழகத்தை குறைத்து மதிப்பிட முடியாது. மூத்த அரசியல் வாதி செங்கோட்டையன் அந்த இயக்கத்திற்கு சென்றது பலம் தான். அதே நேரம் அ.தி.மு.க.,விற்கு பலவீனம் தான். வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் செய்ய வேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை. ஆனால், இந்த பணிகளை முன்னதாகவே ஆரம்பித்து இருந்தால், ஊழியர்களுக்கு பணிச்சுமை இருந்திருக்காது. ஊழியர்ளுக்கான பணிச்சுமையை குறைக்க சிறப்பு தீவிர திருத்த பணிக்கு காலக்கெடு நீட்டிக்கலாம். இப்பணியால் ஓட்டுகள் குறைவதற்கு வாய்ப்பே இல்லை. இறந்தவர்கள் ஓட்டு மட்டுமே நீக்கப்படுகிறது.
இந்த விஷயத்தில் எனது கருத்து தி.மு.க.,விற்கு எதிரான கருத்து இல்லை. இது சிந்தித்து கூறக்கூடிய கருத்து. தமிழக சட்டசபை தேர்தலில் நாம் தமிழர் கட்சி உட்பட இம்முறை மும்முனை போட்டி இருக்க வாய்ப்பு உண்டு.
எங்கள் கூட்டணி வலுவாகவே உள்ளது. தமிழக மக்கள் பா.ஜ.,வை முழுமையாக ஏற்கவில்லை. பா.ஜ., முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை 2 முறை தோல்வி அடைந்துள்ளார். தமிழகத்தில் இந்த தேர்தலிலும் பா.ஜ.,விற்கு வரவேற்பு இருக்காது. பா.ஜ.,வின் சிந்தாந்தத்தை தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்றார்.

