தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ எஸ்.ஐ.ஆர்., பணியை ஒத்தி வைக்க வேண்டும்: ம.தி.மு.க.,

 எஸ்.ஐ.ஆர்., பணியை ஒத்தி வைக்க வேண்டும்: ம.தி.மு.க.,

 எஸ்.ஐ.ஆர்., பணியை ஒத்தி வைக்க வேண்டும்: ம.தி.மு.க.,


ADDED : நவ 30, 2025 01:18 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 30, 2025 01:18 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுக்கோட்டை: 'புயல், மழை காரணமாக எஸ்.ஐ.ஆர்., பணிகளை ஒத்திவைக்க வேண்டும்' என ம.தி.மு.க., முதன்மை செயலர் துரை தெரிவித்தார்.

புதுக்கோட்டையில் அவர் அளித்த பேட்டி:

வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகளுக்கு இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் தேவைப்படும். ஆனால், தமிழகத்தில் ஒரு மாதத்திற்குள் இந்த பணிகளை முடிக்குமாறு, தேர்தல் கமிஷன் கூறுகிறது. இதனால், வழக்கமான பணிகளோடு, கூடுதல் பணிகளை பார்ப்பதால், அரசு ஊழியர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகியுள்ளனர்.

மேலும், பருவமழை மற்றும் புயல் வெள்ளப் பணிகளை அவர்கள் மேற்கொள்ள வேண்டும் என்பதால், எஸ்.ஐ.ஆர்., கால அவகாசத்தை, தலைமை தேர்தல் கமிஷன் நீட்டிக்க வேண்டும்; அதை ஒத்தி வைக்க வேண்டும்.

த.வெ.க.,வில், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் சேர்ந்ததால், தி.மு.க., கூட்டணிக்கோ அ.தி.மு.க., கூட்டணிக்கோ எந்த பாதிப்பும் ஏற்படாது.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us