தேசிய நெடுஞ்சாலையில் லாரிகள், அரசு பஸ் மோதல்; போக்குவரத்து பாதிப்பு
தேசிய நெடுஞ்சாலையில் லாரிகள், அரசு பஸ் மோதல்; போக்குவரத்து பாதிப்பு
ADDED : ஏப் 22, 2025 11:09 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை; திருப்புவனம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் லாரிகள், அரசு பஸ் மோதியதில் 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
இதுபற்றிய விவரம் வருமாறு;
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மதுரை-சிவகங்கை தேசிய நெடுஞ்சாலையில் டீசல் ஏற்றிய லாரிகள் வந்து கொண்டு இருந்தன. அப்போது அதே சாலையில் வந்து கொண்டிருந்த அரசு பஸ் மீது லாரிகள் மோதின.
இந்த விபத்தில் பஸ்சில் இருந்த 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். தகவலறிந்த தீயணைப்புத் துறையினர், உள்ளூர் போலீசார் உதவியுடன் மீட்புப் பணியில் இறங்கி உள்ளனர்.
மேலும் எரிவாயு கசியாமல் இருப்பதற்காக சோப்பு நுரைகளைக் கொண்டு தடுப்பு பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் மதுரை சிவகங்கை தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.