சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து: 4 பேர் பலி
சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து: 4 பேர் பலி
UPDATED : ஜூலை 21, 2025 05:28 PM
ADDED : ஜூலை 21, 2025 04:33 PM

சிவகாசி; சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் நிகழ்ந்த பயங்கர வெடிவிபத்தில் 4 பேர் பலியாகி உள்ளனர்.
ஆண்டியபுரம் பகுதியில் உள்ள பட்டாசு ஆலையில் இன்று வழக்கம் போல் தொழிலாளர்கள் பட்டாசுகள் தயாரிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென அங்குள்ள ஒரு அறையில் இருந்த பட்டாசுகள் வெடித்து சிதற ஆரம்பித்தன.
பட்டாசுகள் வெடிக்கும் சத்தம் பல நூறு மீட்டர் தொலைவு எதிரொலித்தது. தகவலறிந்த தீயணைப்புத்துறையினர் உடனடியாக வெடி விபத்து நிகழ்ந்த பகுதிக்கு விரைந்தனர். தீயை அணைக்கும் பணியில் அவர்கள் இறங்கினர்.
இந்த வெடி விபத்தில் 2 பெண்கள் உள்பட 4 பேர் பலியாகி உள்ளனர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர்.
வெடி விபத்துக்கான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.