த.வெ.க., நிர்வாகியை தாக்கிய ஆறு பேர் மீது வழக்கு பதிவு
த.வெ.க., நிர்வாகியை தாக்கிய ஆறு பேர் மீது வழக்கு பதிவு
ADDED : நவ 25, 2026 09:08 PM

கமுதி: ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே, த.வெ.க., நிர்வாகி கிஷோர்குமார், 28, என்பவரை தாக்கி, அவரது கார் கண்ணாடியை உடைத்து கொலை மிரட்டல் விடுத்த, ஆறு பேர் மீது வழக்கு பதியப்பட்டது.
கோட்டைமேடு பகுதியை சேர்ந்தவர் கிஷோர்குமார்; த.வெ.க., மேற்கு மாவட்ட பொருளாளர். இவரது வீட்டிற்கு இன்று (நவ.,25) மாலை வந்த, பெருமாள் தேவன்பட்டியைச் சேர்ந்த கணேசபாண்டியன், முனியசாமி, குமார் உள்ளிட்டோர், கிஷோர்குமாரை தரக்குறைவாக பேசினர்.
அதன்பின், வீட்டின் முன் நிறுத்தியிருந்த கார் கண்ணாடியை உடைத்தவர்கள், கிஷோர்குமாரை கட்டையால் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர். காயமடைந்த கிஷோர்குமார், கமுதி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதையடுத்து கணேசபாண்டியன், முனியசாமி, குமார் உட்பட, ஆறு பேர் மீது, கமுதி போலீசார் வழக்கு பதிந்து, விசாரித்து வருகின்றனர்.
