சருமம், முடக்குவாதம், தலைவலி ஆயுஷ் மருத்துவத்தில் ஆராய்ச்சி
சருமம், முடக்குவாதம், தலைவலி ஆயுஷ் மருத்துவத்தில் ஆராய்ச்சி
ADDED : அக் 08, 2024 12:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: தமிழ்நாடு ஹோமியோபதி மருத்துவ கவுன்சில் தலைவர் ஜெயகுமார் கூறியதாவது:
ஹோமியோபதி மருந்துகள் இந்தியாவிலேயே தயாரிக்கப்படுகின்றன. உள்நாட்டு தேவைகளுக்கு மட்டுமின்றி, வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்திய மருத்துவ முறையை பிரபலப்படுத்த, மத்திய ஆயுஷ் துறை, 50 நாடுகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.
சென்னையில் மாற்றுத் திறனாளிகளுக்கான, 'நிப்மெட் மையம்' செயல்படுகிறது. இதுபோல, தென் மாவட்டங்களிலும் ஒரு மையம் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது, சரும பாதிப்புகள், முடக்குவாதம், நாள்பட்ட தலைவலி உள்ளிட்ட பாதிப்புகளுக்கான சிகிச்சை முறைகள் குறித்து, ஆயுஷ் துறை ஆராய்ச்சியில் ஈடுபட்டுஉள்ளது.
இவ்வாறு கூறினார்.