UPDATED : டிச 31, 2024 10:01 AM
ADDED : டிச 31, 2024 09:59 AM

சென்னை: மறைந்த சின்னத்திரை நடிகை சித்ராவின் தந்தை காமராஜ் சென்னை திருவான்மியூரில் உள்ள வீட்டில் துாக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
சின்னத்திரை நடிகை சித்ரா, வேகமாக வளர்ந்து வந்த நிலையில் கடந்த 2020ம் ஆண்டு பூந்தமல்லி அருகே நசரத்பேட்டையில் உள்ள ஒரு ஓட்டலில் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதில் சித்ராவின் கணவர் ஹேம்நாத் உள்பட பலர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு திருவள்ளூர் மாவட்ட மகளிர் கோர்ட்டில் நடந்தது.
வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஹேம்நாத் உள்ளிட்ட குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை என்று கூறி ஹேம்நாத்தை விடுதலை செய்தது. இந்நிலையில், இன்று (டிச.,31) சித்ராவின் தந்தை காமராஜ் சென்னை திருவான்மியூரில் உள்ள வீட்டில் துாக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
ஓய்வு பெற்ற காவலரான அவரது தற்கொலைக்கான காரணம் என்ன என்பது தெரியவில்லை. காமராஜ் உடலை போலீசார் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.