30 லட்சம் தொழிலாளர்களுக்கு விரைவில் 'ஸ்மார்ட் கார்டு'
30 லட்சம் தொழிலாளர்களுக்கு விரைவில் 'ஸ்மார்ட் கார்டு'
ADDED : செப் 22, 2025 03:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: தொழிலாளர் நலத்துறை சார்பில், 30 லட்சம் தொழிலாளர்களுக்கு, 'ஸ்மார்ட் கார்டு' வழங்கப்பட உள்ளது.
தமிழக அரசின் தொழிலாளர் நலத்துறை கட்டுப்பாட்டில் உள்ள, தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியம், அமைப்பு சாரா ஓட்டுநர்கள் மற்றும் ஆட்டோ மொபைல் தொழிலாளர்கள் நல வாரியம் போன்றவற்றில் உறுப்பினராக உள்ள, 30 லட்சம் தொழிலாளர்களுக்கு, 'ஸ்மார்ட் கார்டு' வழங்க, தொழிலாளர் நலத்துறை முடிவு செய்து உள்ளது.
இக்கார்டில் வாரிய பதிவு எண், ஆதார் எண், தொழிலாளி பெயர், அவரது தந்தை அல்லது கணவர் பெயர், பிறந்த தேதி, வயது, புகைப்படம், பாலினம், தொழில், முகவரி, மொபைல் எண் போன்ற விபரங்களுடன், 'கியூ.ஆர். குறியீடும்' இடம் பெறும்.
இக்கார்டு, அவர்கள் அரசின் நலத்திட்ட உதவிகளை பெற, உதவியாக இருக்கும்.