sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/தமிழகம்/ தொழிலாளர்களுக்கு 'ஸ்மார்ட் கார்டுகள்'

 தொழிலாளர்களுக்கு 'ஸ்மார்ட் கார்டுகள்'

 தொழிலாளர்களுக்கு 'ஸ்மார்ட் கார்டுகள்'


ADDED : பிப் 18, 2026 05:59 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 18, 2026 05:59 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: கட்டுமான தொழிலாளர்கள், தானியங்கி மோட்டார் வாகனங்கள் பழுது பார்க்கும் தொழிலாளர்களுக்கு, 'ஸ்மார்ட் கார்டுகள்' வழங்கப்பட்டுள்ளன.

தொழிலாளர் நலத்துறை வாயிலாக, அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியங்களில், 31.5 லட்சம் கட்டுமானத் தொழிலாளர்கள், அமைப்புசாரா ஓட்டுநர்கள், தானியங்கி மோட்டார் வாகனங்கள் பழுதுபார்க்கும் தொழிலாளர்கள், பதிவு செய்துள்ளனர்.

இவர்களுக்கு 'ஸ்மார்ட் கார்டுகள்' வழங்கும் திட்டத்தை, அமைச்சர் சி.வி.கணேசன் நேற்று, சென்னையில் துவக்கி வைத்தார்.

அப்போது அமைச்சர் கணேசன் கூறியதாவது:

கட்டுமானத் தொழிலாளர்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில், குடிநீர் மற்றும் அடிப்படை வசதிகளுடன் கூடிய, 50 தொழிலாளர் நலக்கூடங்கள், 20.5 கோடி ரூபாய் செலவில் விரைவில் அமைக்கப்பட உள்ளன.

உயர்கல்வி படிக்கும் பதிவுபெற்ற கட்டுமானத் தொழிலாளர்களின், 10 ஆயிரம் குழந்தைகளுக்கு இணையவழியில் திறன் பயிற்சி திட்டம், முதல்வரால் விரைவில் துவக்கி வைக்கப்பட உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் தொழிலாளர் நலத்துறை செயலர் வீரராகவ ராவ், ஆணையர் ராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us