தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/சமூகநீதி அறக்கட்டளை தொடக்கம்

சமூகநீதி அறக்கட்டளை தொடக்கம்

சமூகநீதி அறக்கட்டளை தொடக்கம்


UPDATED : அக் 13, 2026 12:00 AM

ADDED : அக் 12, 2026 10:48 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 13, 2026 12:00 AM ADDED : அக் 12, 2026 10:48 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் மேம்பாட்டிற்காக, சமூக நீதி அறக்கட்டளை தொடங்கப்பட்டு உள்ளது.

சமூகநீதித்துறை சார்பில், இந்த அறக்கட்டளை தொடங்கப்பட்டு உள்ளது. சமூகநீதித் துறை அமைச்சர் வன்னி அரசு நேற்று இதை தொடங்கி வைத்தார். இந்த அறக்கட்டளை, சென்னை சேப்பாக்கத்தில் உள்ள, ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குனரகத்தில் செயல்படும். துறையின் செயலர் சுப்பையன், அதன் தலைவராகவும், நிர்வாக அறங்காவலராகவும் செயல்படுவார்.

ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குனர் உறுப்பினர் செயலராகவும், பழங்குடியினர் நலத்துறை இயக்குனர், தாட்கோ இயக்குனர் ஆகியோர் உறுப்பினர்களாகவும் செயல்படுவர் என, அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த அறக்கட்டளை வாயிலாக, பெரிய நிறுவனங்கள், கொடையாளர்கள், தனி நபர்கள், முன்னாள் மாணவர்களிடம் இருந்து, நிதி ஆதாரம் பெறப்பட உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us