5 கோடி யூனிட்டை எட்டியது சூரியசக்தி மின் உற்பத்தி
5 கோடி யூனிட்டை எட்டியது சூரியசக்தி மின் உற்பத்தி
UPDATED : ஆக 08, 2025 01:13 AM
ADDED : ஆக 07, 2025 11:29 PM

சென்னை:தமிழகத்தில் சூரியசக்தி மின் உற்பத்தி, எப்போதும் இல்லாத அளவாக நேற்று முன்தினம், 4.93 கோடி யூனிட்களாக அதிகரித்துள்ளது.
சூரியசக்தி மின் உற்பத் திக்கு, சூரியனின் வெப்பத்தை விட, ஒளியே முக்கியம். தமிழகத் தில் ஆண்டுக்கு, 300 நாட்களுக்கு மேல் சூரிய சக்தி மின்சாரம் கிடைக்கும் சாதகமான வானிலை நிலவுகிறது.
தற்போதைய நிலவரப்படி, மாநிலத்தின் ஒட்டுமொத்த சூரியசக்தி மின் உற்பத்தி திறன், 10,600 மெகா வாட்டாக உள்ளது. இதிலிருந்து, மழை தவிர்த்த நாட்களில் தினமும் சராசரியாக, 3 கோடி - 4 கோடி யூனிட் மின்சாரம் உற்பத்தியாகிறது.
கடந்த ஜூலை 5ம் தேதி, 4.85 கோடி யூனிட் கள் மின்சாரம் கிடைத்தது. இதுவே உச்ச அளவாக இருந்தது. நேற்று முன்தினம், எப்போதும் இல்லாத அளவாக, 4.9 3 கோடி யூனிட்கள் மின்சாரம் உற்பத்தியாகியுள்ளது.