நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிறார்கள், பெண்கள் உள்பட, 2.69 கோடி பேருக்கு, நாளை முதல் குடற்புழு நீக்க மாத்திரைகள் சுகாதாரத் துறை சார்பில் வழங்கப்படுகின்றன. இம்மாத்திரை சாப்பிடுவதால், ரத்த சோகை குறைந்து ஊட்டச்சத்து அதிகரிக்கும். மேலும், மன ஆரோக்கியம், உடல் வளர்ச்சி, கற்றல் திறன் மேம்பாடு உள்ளிட்ட நன்மைகள் கிடைக்கும்.
எனவே, பெற்றோர் தங்களது குழந்தைகள், தவறாமல் குடற்புழு நீக்க மாத்திரை எடுத்துக் கொள்வதை உறுதி செய்ய வேண்டும். அங்கன்வாடிகள், பள்ளிகள், கல்லுாரிகளில் மாத்திரைகள் வழங்கப்படும். விடுபட்ட குழந்தைகளுக்கு, வரும் 17ம் தேதி சிறப்பு முகாம் நடத்தி வழங்கப்படும்.

