நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாடு முழுதும் வீடுகளுக்கு நேரடி குடிநீர் குழாய் இணைப்பு வழங்க, ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தை, மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.
தமிழகத்தில், ஒரு கோடி இணைப்புகள் வழங்க திட்டமிடப்பட்டு, இந்தாண்டு ஏப்ரலுக்குள் பணியை முடிக்க திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால், நிதி பற்றாக்குறையால் பணிகள் முடியவில்லை. தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று, அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை கெடுவை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது.

