தமிழகத்தில் சுற்றுச்சூழல் கல்வி, விழிப்புணர்வு, பாதுகாப்பு, மேலாண்மை மற்றும் ஆராய்ச்சி பணிகளில் சிறப்பாக செயல்படும் கல்வி நிறுவனங்கள், தனி நபர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு, 2024ம் ஆண்டிற்கான சுற்றுச்சூழல் விருதுகள் வழங்க அரசு உத்தேசித்துள்ளது. தகுதியுள்ளவர்கள், நவம்பர் 14ம் தேதிக்குள் https://awards.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
மத்திய இடைநிலை கல்வி வாரியம் சார்பில், 'சிடெட்' எனும் ஆசிரியர் தகுதி தேர்வு, அடுத்த ஆண்டு பிப்ரவரி 8ம் தேதி நடக்கிறது. தமிழ், ஆங்கிலம், ஹிந்தி உட்பட 20 மொழிகளில் தேர்வு நடக்கும். நாடு முழுதும், 132 நகரங்களில் தேர்வுகளை நடத்த சி.பி.எஸ்.இ., திட்டமிட்டுள்ளது.
தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் சார்பில், 'சேல்ஸ் போர்ஸ் டெவலப்பர்' எனும் விற்பனை படை உருவாக்குவது குறித்த 45 நாள் பயிற்சி படிப்பு வழங்கப்படுகிறது. சென்னை, கோவை, ஈரோடு, திண்டுக்கல் நகரங்களில் நடக்கும் இப்பயிற்சிக்கு, பி.இ., - பி.டெக்., தொடர்புடைய பிரிவுகளில் பட்டம் பெற்றோர், https://candidate.tnskill.tn.gov.in/skillwallet/course/4418 என்ற இணையதள பக்கத்தில் விண்ணப்பிக்கலாம்.
மாநில பாடத்திட்டத்தின் கீழ் படிக்கும் மாணவ - மாணவியருக்கான, 2025 - 26ம் கல்வியாண்டு, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வு அட்டவணை, நவ., 4ம் தேதி வெளியிடப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ் தெரிவித்துள்ளார்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் கலை, இலக்கிய மேம்பாட்டு சங்கம் சார்பில், சிறந்த எழுத்தாளர்களின் இலக்கிய படைப்புகளை வெளியிட, ஊக்கத்தொகை பெற விண்ணப்பிக்கலாம். தகுதியானவர்கள், tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்யலாம்.

