பாடல்களுக்கு உரிமை கோரும் வழக்கு: கோர்ட்டில் ஆஜரானார் இளையராஜா
பாடல்களுக்கு உரிமை கோரும் வழக்கு: கோர்ட்டில் ஆஜரானார் இளையராஜா
UPDATED : பிப் 13, 2025 03:06 PM
ADDED : பிப் 13, 2025 11:56 AM

சென்னை: பாடல்கள் உரிமை தொடர்பான வழக்கில் சாட்சியம் அளிப்பதற்காக, சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாஸ்டர் நீதிமன்றத்தில் இசை அமைப்பாளர் இளையராஜா ஆஜரானார்.
தேவர் மகன், குணா உள்ளிட்ட 109 படங்களின் பாடல்களை யூடியூப் மற்றும் சமூக வலைதளங்களில் வெளியிட தடை கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கை மியூசிக் மாஸ்டர் என்ற இசை நிறுவனம் கடந்த 2010ம் ஆண்டு தொடர்ந்தது.
இந்த வழக்கில் எதிர் மனுதாரராக சேர்க்கப்பட்டுள்ள இளையராஜா, சாட்சியம் அளிப்பதற்காக, சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாஸ்டர் நீதிமன்றத்திற்கு வந்தார். அவர், சாட்சியங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார். பின்னர் அவர் காரில் புறப்பட்டு சென்றார்.
நீதிமன்றத்தில், இளையராஜா தரப்பில் வாதாடுகையில், எனக்கு எத்தனை பங்களாக்கள் உள்ளது எனத் தெரியாது. சொந்தமாக ரெக்கார்டிங் ஸ்டூடியோ கிடையாது. முழு ஈடுபாடும் இசையில் உள்ளதால் உலகளாவிய பொருட்கள் பற்றி எனக்கு தெரியாது. பெயர், புகழ், செல்வம் எல்லாம் சினிமா மூலம் கிடைத்தது எனக்கூறப்பட்டது.