தட்கல் டிக்கெட் கூட கிடைக்காத தென் மாவட்ட ரயில்கள்; பரிதவிக்கும் பயணிகள்
தட்கல் டிக்கெட் கூட கிடைக்காத தென் மாவட்ட ரயில்கள்; பரிதவிக்கும் பயணிகள்
ADDED : ஜன 30, 2024 08:46 AM

விருதுநகர் : தென் தமிழகத்தில் இருந்து குறைவான ரயில்கள் இயக்கப்படுவதால் தட்கல் டிக்கெட் கூட கிடைப்பதில்லை என்று பயணிகள் புலம்புகின்றனர்.
சென்னை
கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்ட்டில் தென் மாவட்ட பஸ்கள் நிறுத்தப்படுகின்றன.
அங்கிருந்து சென்னை செல்ல 2 மணி நேரம் ஆகிறது. இதனால் சென்னை எழும்பூரில்
இறங்கும் வகையில் ரயில் பயணத்தை தேர்வு செய்வது அதிகரித்துள்ளது.
தென்
மாவட்டங்களில் இருந்து வந்தே பாரத், அனந்தபுரி, முத்து நகர், நெல்லை,
பொதிகை, சிலம்பு மற்றும் முன்பதிவில்லா பயணிகளுக்காக அந்தியோதயா ரயில்கள்
இயக்கப்படுகின்றன. அவை அனைத்திலும் முன்பதிவு நிரம்பி வழிகிறது.
பயணத்திற்கு முதல் நாள் கூடுதல் கட்டணத்தில் முன்பதிவு செய்யும் தட்கல்
டிக்கெட்கள் கூட கிடைப்பதில்லை. இரட்டை ரயில் பாதை ஏற்படுத்தப்பட்ட
பின்னரும் பயணிகள் தேவைக்கேற்ப கூடுதல் ரயில்கள் அறிவிக்கப்படவில்லை.
கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தால் வழக்கத்தை விட அதிகம் பயணிகள் ரயிலை
விரும்பும் நிலையில் கூடுதலாக ரயில்கள் இயக்குவது அவசியம்.
வந்தே
பாரத் ரயில் திருநெல்வேலியில் காலை புறப்படுவது போல், சென்னையில் இருந்தும்
காலை புறப்படுவது போல இயக்கலாம். மதுரை, விருதுநகர், திருநெல்வேலி,
துாத்துக்குடி, ராமேஸ்வரத்தில் இருந்து சென்னைக்கு கூடுதல் ரயில்கள் இயக்க
வேண்டும்.