sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 08, 2026 ,மாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

சிவில் சர்வீசஸ் தேர்வில் எஸ் பி அலுவலக உதவியாளர் அசத்தல்

/

சிவில் சர்வீசஸ் தேர்வில் எஸ் பி அலுவலக உதவியாளர் அசத்தல்

சிவில் சர்வீசஸ் தேர்வில் எஸ் பி அலுவலக உதவியாளர் அசத்தல்

சிவில் சர்வீசஸ் தேர்வில் எஸ் பி அலுவலக உதவியாளர் அசத்தல்

14


ADDED : மார் 08, 2026 06:47 AM

Google News

14

ADDED : மார் 08, 2026 06:47 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நமது நிருபர்

ராமநாதபுரம் மாவட்டம், சிக்கல் கிராமத்தைச் சேர்ந்த சேகு அப்துல் காதர், சர்மிளா பானு தம்பதியின் மகன் ஷேக் முகம்மது கபிசுதீன், 29. ராமநாதபுரம் செய்யது அம்மாள் மேல்நிலை பள்ளியில் பிளஸ் 2 வரையும், மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லுாரியில் மேற்படிப்பும் முடித்தார்.

ராமநாதபுரம் எஸ்.பி., அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரிந்த படியே அகில இந்திய குடிமைப்பணி தேர்வுக்கு படித்தார். கடந்தாண்டு நடந்த குடிமைப்பணி தேர்வு முடிவு நேற்று முன்தினம் வெளியானது. இதில், ஷேக் முகம்மது கபிசுதீன், 485வது இடம் பிடித்துள்ளார்.

ஷேக் முகம்மது கபிசுதீன் கூறுகையில், “குடிமைப்பணி தேர்வுக்காக ஏழு ஆண்டுகளாக பயின்றேன். இதில், 4 முறை நேர்முகத் தேர்வு வரை சென்றேன். தற்போது இந்திய அளவில், 485வது இடம் பிடித்துள்ளது மகிழ்ச்சியாக உள்ளது.

“ ஐ.எப்.எஸ்., அல்லது ஐ.பி.எஸ்., கிடைக்கும் என எதிர்ப்பார்க்கிறேன். கடந்த மாதம் தான் எனக்கு பெண் குழந்தை பிறந்தது. மகளின் அதிர்ஷ்டமாக இந்த வெற்றியை பார்க்கிறேன்,” என்றார்.






      Dinamalar
      Follow us