உள்ளடக்கத்திற்கு செல்ல
ADDED : செப் 04, 2026 03:06 AM
அ நிறம் | அளவு
சென்னை: ''சட்டசபையில் எம்.எல்.ஏ.,க்கள், மொபைல் போன் பார்த்து படிக்கக் கூடாது,'' என, சபாநாயகர் பிரபாகர் அறிவுறுத்தினார்.
சட்டசபையில் காவல்துறை மானிய கோரிக்கையில், த.வெ.க., உறுப்பினர் மதார் பக்ருதீன் பேசும்போது, மொபைல் பார்த்து படித்தார். அதை தி.மு.க., வினர் சுட்டிக்காட்டினர். சபாநாயகர் பிரபாகர், ''சபையில் மொபைல் போன் பார்த்தபடி, யாரும் பேசக்கூடாது. மொபைல் பயன்படுத்துவதை, தவிர்க்க வேண்டும்,'' என, அறிவுறுத்தினார்.
