உள்ளடக்கத்திற்கு செல்ல

கவர்னர் அர்லேகருடன் சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் சந்திப்பு
கவர்னர் அர்லேகருடன் சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் சந்திப்பு
ADDED : ஜூன் 29, 2026 01:05 PM

அ நிறம் | அளவு
சென்னை: தமிழக கவர்னர் அர்லேகருடன் சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் இன்று சந்தித்து பேசினார்.
தமிழகத்தில் தவெக தலைமை ஆட்சி அமைந்தவுடன், அண்மையில் தமிழக சட்டசபை கூட்டத் தொடர் கவர்னர் அர்லேகரின் உரையுடன் துவங்கி அமைதியான முறையில் நடந்து முடிந்தது. இந்த நிலையில், கிண்டியில் உள்ள லோக் பவனில் கவர்னர் அர்லேகருடன் சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் இன்று சந்தித்து பேசினார். அவருடன் மின்வாரியத்துறை அமைச்சர் நிர்மல்குமாரும் இருந்தார்.
இதைத்தொடர்ந்து, 2026-27 நிதியாண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடரை கூட்டுவது தொடர்பாக கவர்னரிடம் சபாநாயகர் பிரபாகர் ஆலோசனை நடத்தியதாகக் கூறப்படுகிறது. பட்ஜெட் கூட்டத் தொடருக்கான தேதியை சபாநாயகர் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
