UPDATED : அக் 13, 2026 09:24 PM
ADDED : அக் 13, 2026 08:59 PM
சென்னை: தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் பார்த்திபன் கூறியதாவது:
ஆயுத பூஜையை முன்னிட்டு, நாளை முதல் 18ம் தேதி வரை, சென்னையில் இருந்து வழக்கமாக இயக்கக்கூடிய 8,764 பஸ்களுடன், 6,199 சிறப்பு பஸ்கள் என, நான்கு நாட்களுக்கும் மொத்தமாக, 14 ஆயிரத்து 963 பஸ்கள் இயக்கப்படும்.
தீபாவளியை முன்னிட்டு, நவ., 5 முதல் 7ம் தேதி வரை, வழக்கமான 6,573 பஸ்களுடன், 9,086 சிறப்பு பஸ்கள் என மூன்று நாட்களுக்கு, 15 ஆயிரத்து 659 பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
ஆயுத பூஜை, தீபாவளி முடிந்த பின், பல்வேறு ஊர்களில் இருந்து சென்னைக்கு, 11 ஆயிரத்து 197 பஸ்கள் இயக்கப்படும். சென்னையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், கிளாம்பாக்கம் வளாகத்திலும், மறைமலைநகர் பகுதியிலும் தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
