ADDED : ஜன 25, 2026 05:38 AM

சென்னை: பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, நான்காம் நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்றுனர்களை, போலீசார் கைது செய்தனர்.
தமிழ்நாடு ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்ட மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்றுனர்கள் சங்கம் சார்பில், பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த 21ம் தேதி முதல் சென்னையில் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
நான்காம் நாளான நேற்று, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள, டி.பி.ஐ., அலுவலகத்தை, 100க்கும் மேற்பட்ட சிறப்பு பயிற்றுனர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது, பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்த போலீசார், எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் அடைத்தனர்; மாலையில் விடுவித்தனர்.
பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, நான்காம் நாளாக சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட, மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்றுனர்கள்.

