தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ மத்திய அரசு நிதியில் குறுவை சிறப்பு தொகுப்பு

 மத்திய அரசு நிதியில் குறுவை சிறப்பு தொகுப்பு

 மத்திய அரசு நிதியில் குறுவை சிறப்பு தொகுப்பு


ADDED : ஜூன் 26, 2026 01:24 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 26, 2026 01:24 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை; மாநில அரசு மட்டுமின்றி, மத்திய அரசு நிதியிலும் குறுவை சிறப்பு தொகுப்பு திட்டத்தை, வேளாண் துறை செயல் படுத்தி வருகிறது.

தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட, டெல்டா மாவட்டங்களில் ஆண்டுதோறும் ஜூன் மாதம் குறுவை சாகுபடி மேற்கொள்ளப்படும்.

இதற்காக, சேலம், மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும். சாகுபடியில் ஈடுபடும் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில், 2012ம் ஆண்டு அ.தி.மு.க., ஆட்சியில் குறுவை சிறப்பு தொகுப்பு திட்டம் நடைமுறைக்கு வந்தது.

இதை முந்தைய தி.மு.க., அரசும் தொடர்ந்தது. தற்போதைய தமிழக வெற்றிக் கழக அரசும் விவசாயிகள் நலன் கருதி, குறுவை சிறப்பு தொகுப்பு திட்டத்தை தொடர்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி, டெல்டா மாவட்டங்களில், இதை செயல்படுத்த, 77.3 கோடி ரூபாயும், மற்ற மாவட்டங்களுக்கு 63.2 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டு உள்ளது.

மாநில அரசு நிதியில் மட்டுமின்றி, மத்திய அரசின் தேசிய உணவு மற்றும் ஊட்டசத்து பாதுகாப்பு திட்ட நிதியை இணைத்து, குறுவை தொகுப்பு திட்டம் செயல்படுத்தப் படுகிறது.

அதன்படி, நெல் நுண்ணுாட்ட கலவை, திரவ உயிர் உரங்கள் வினியோகம் ஆகியவை, மத்திய அரசு நிதியில் வழங்கப்பட உள்ளன. முந்தைய தி.மு.க., - அ.தி.மு.க., அரசுகள் போல மத்திய அரசின் உதவிகள் மறைக்கப்படவில்லை.

மத்திய அரசு நிதியில், குறுவை தொகுப்பு திட்டம் செயல்படுத்துவது குறித்து, அரசாணையில் தெளிவாக கூறப்பட்டு உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us