இந்தோ-திபெத் பயிற்சி மையத்தில் துப்பாக்கிகளுக்கு சிறப்பு பூஜை
இந்தோ-திபெத் பயிற்சி மையத்தில் துப்பாக்கிகளுக்கு சிறப்பு பூஜை
ADDED : அக் 03, 2025 03:16 AM

சிவகங்கை:சிவகங்கை மாவட்டம், இலுப்பக்குடி இந்தோ திபெத் எல்லை போலீஸ் பாதுகாப்பு படை பயிற்சி மையத்தில் ஆயுத பூஜை, விஜயதசமியை முன்னிட்டு துப்பாக்கிகளை வைத்து வழிபட்டனர்.
சிவகங்கை அருகே உள்ள இப்பயிற்சி மையத்தில் பல்வேறு மாநிலங்களில் இருந்து தேர்வு செய்த வீரர்கள் 1200 பேருக்கு துப்பாக்கி சுடுதல், மலையேறுதல், நாட்டின் எல்லையை பாதுகாக்கும் நடைமுறைகள், கயிறு ஏறுதல், பெரிய கட்டடங்களில் ஏறுதல் உள்ளிட்ட பயிற்சிகளை அளித்து வருகின்றனர். இங்கு ஏ.கே., 47, ஜி.எப்., (7.62 எம்.எம்.,) ரகம், ராக்கெட் லாஞ்சர் உள்ளிட்ட துப்பாக்கி ரகங்கள் உள்ளன. இவற்றை அலங்கரித்து, பூஜைகள் செய்து அனைத்து வீரர்களும் வழிபட்டனர்.
பயிற்சி மைய டி.ஐ.ஜி., ஜஸ்டீன் ராபர்ட் தலைமை வகித்தார். கமாண்டன்ட் வி.ஆர்., சந்திரன் பூஜைகளை செய்தார். துணை கமாண்டன்ட் ராகுல் சிங் ரானா உட்பட பயிற்சி மைய அதிகாரிகள், வீரர்கள் பங்கேற்றனர். வடமாநிலத்தவர் முறைப்படி நேற்று இரவு 7:30 மணிக்கு செயற்கையாக உருவாக்கிய ராவணன் பொம்மைக்கு தீவைத்து எரித்தனர்.