தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/போதைப்பொருள் கும்பல் ‘நெட்ஒர்க்’ தகர்க்க சிறப்பு அதிரடிப்படை அமைப்பு

போதைப்பொருள் கும்பல் ‘நெட்ஒர்க்’ தகர்க்க சிறப்பு அதிரடிப்படை அமைப்பு

போதைப்பொருள் கும்பல் ‘நெட்ஒர்க்’ தகர்க்க சிறப்பு அதிரடிப்படை அமைப்பு


UPDATED : அக் 18, 2026 06:50 PM

ADDED : அக் 18, 2026 06:46 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 18, 2026 06:50 PM ADDED : அக் 18, 2026 06:46 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: போதைப்பொருள் கும்பலின், ‘நெட்ஒர்க்’கை சிதைக்க, சிறப்பு அதிரடிப்படை அமைக்கப்பட்டு உள்ளதாக, கூடுதல் டி.ஜி.பி., சங்கர் கூறினார்.

அவர் கூறியதாவது:

போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பாக, அனைத்து மாநில காவல் துறை உயர் அதிகாரிகள் கூட்டத்தை, டில்லியில் சமீபத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நடத்தினார். அதில், 2029க்குள், நாட்டில் போதைப்பொருட்களை ஒழிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

தமிழகத்தில் அதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. முதல்வர் விஜய், வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில், போதைப்பொருள் ஒழிப்புக்கு என, 65 காவல் நிலையங்களை உருவாக்கி உள்ளார். போதைப் பொருள் மற்றும் புகையிலை பொருட்கள் இல்லாத கல்வி வளாகங்கள் என்ற திட்டத்தையும் அறிமுகம் செய்துள்ளார். இதற்காக, கல்வி நிறுவனங்களில் போதைப்பொருள் ஒழிப்பு மன்றங்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.

போதைப் பொருள் ஒழிப்பில் மூன்று படி நிலைகள் உள்ளன. அதாவது, எங்கிருந்து, யாரால் சப்ளை செய்யப்படுகிறது என்பதை கண்டறிந்து ஒழிப்பது, அதன் தேவையை குறைப்பது, போதைப்பொருள் பழக்கத்திற்கு ஆளானோரை மீட்பது போன்ற செயல்கள் மிக முக்கியமானவை.

அதற்காகவே, எங்கிருந்து, யாரால் சப்ளை செய்யப்படுகிறது என்பதை கண்டறிந்து, போதைப்பொருள் கும்பலின் தொடர்பு வளையத்தை உடைக்க, தலைமையகத்தில், சைபர் குற்றப்பிரிவு, உளவுப்பிரிவு, போதைப்பொருள் ஒழிப்பில் திறமை வாய்ந்த போலீசார் அடங்கிய சிறப்பு அதிரடிப்படை உருவாக்கப்பட்டுள்ளது.

போதைப்பொருளுக்கான தேவையை குறைக்க, அதன் தீமைகள் குறித்து விழிப்புணர்வு செய்து வருகிறோம். இதற்கு நல்ல பலனும் கிடைத்துள்ளது. அதேபோல, போதைப் பொருளுக்கு அடிமையான நபர்களை கண்டறிந்து, அவர்களுக்கு கவுன்சிலிங் அளித்து, மீட்பு பணிகளிலும் ஈடுபட்டு வருகிறோம்.

போதைப்பொருள் தடுப்பு மற்றும் ஒழிப்பு பணியில், தமிழகம் முன்னணியில் உள்ளது. போதைப்பொருள் தொடர்பான வழக்கில் சிக்குவோரின் சொத்துக்களையும் முடக்கி வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us